முன் ஜாமீன் கோரி நடிகர் சிம்பு மனு தாக்கல் விசாரணை நாளை தொடக்கம்

Bookmark and Share

முன் ஜாமீன் கோரி நடிகர் சிம்பு மனு தாக்கல் விசாரணை நாளை தொடக்கம்

பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார். மனு மீதான விசாரணை நாளை தொடங்குகிறது. பீப் பாடல் விவகாரத்தில் அனிருத்திற்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. நானே முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன் என்று நடிகர் சிம்பு சமீபத்தில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த விவகாரத்தில் இயக்குனரும், சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் தனது பங்கிற்கு தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். தற்போது இந்த விவகாரத்தில் கோவை போலீசார் மீண்டும் சிம்பு, அனிருத் இருவருக்கும் சம்மன் அனுப்பி வருகின்ற 2 ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் சிம்பு, அனிருத் இருவர் மீதும் மேலும் 2 வழக்குகள் புதியதாக போடப்பட்டு உள்ளன.இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இந்த வழக்கில் கோவை போலீசார் 2 வது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில் நாளை சென்னை உயர்நீதிமன்றத்தில் சிம்புவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை துவங்குகிறது.

பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு அமையுமா? என்பது நாளை தெரிய வரும்.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions