மீண்டும் படப்பிடிப்பில் பிசியாகும் சிம்பு

Bookmark and Share

மீண்டும் படப்பிடிப்பில் பிசியாகும் சிம்பு

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவுதம் மேனனின் ‘அச்சம் என்பது மடமையடா’, செல்வராகவனின் ‘கான்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சிம்பு, படப்பிடிப்புக்கு சிறிது இடைவெளி கொடுத்துவிட்டு, ஓய்வெடுப்பதற்காக வெளிநாடு பறந்து போனார்.

இந்நிலையில் ஓய்வை முடித்து விட்டு தற்போது சென்னை திரும்பி வந்துள்ளார் சிம்பு. இதைத் தொடர்ந்து இந்த வாரத்தில் நடைபெறவிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அதைத் தொடர்ந்து ‘வாலு’ படத்தின் இரண்டாவது டிரைலரை வெளியிடும் வேலைகளிலும் களமிறங்கவுள்ளார்.

‘வாலு’ படம் வருகிற ஜூலை 17-ந் தேதி வெளிவரப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான புரோமோஷன் வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர, பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தின் வேலைகள் இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. ‘வாலு’ ரிலீசுக்கு பிறகு இதற்கான வேலைகளில் சிம்பு களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions