சிம்புவுடன் மீண்டும் ஆட சம்மதித்த ஹன்சிகா

Bookmark and Share

சிம்புவுடன் மீண்டும் ஆட சம்மதித்த ஹன்சிகா

சிம்பு - ஹன்சிகா இருவரும் இணைந்து நடிக்க வேட்டை மன்னன், வாலு ஆகிய படங்கள் சிறிய இடைவெளியில் சில வருடங்களுக்கு முன் ஆரம்பமானது. ஆனால், வேட்டை மன்னன் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் பின்னர் கைவிடப்பட்டது.

ஆனால்,  வாலு படம் தட்டுத் தடுமாறி படப்பிடிப்பு நடந்து ஒரு வழியாக அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இன்னும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள தாறுமாறு... என்ற பாடலுக்கு படப்பிடிப்பு நடத்தப்படாமல் உள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த சமயத்தில் சிம்புவும், ஹன்சிகாவும் காதலிக்க ஆரம்பித்து, அதையும் அறிவித்து, பின்னர் சில மாதங்களிலேயே பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்தார்கள்.

அதனால், அந்தப் பாடலை இதுவரை படம் பிடிக்காமலே இருந்தார்கள். இடையில் அந்தப் பாடலில் சில முன்னாள் ஹீரோயின்களை நடிக்க வைத்து படப்பிடிப்பை முடித்துவிடலாமா என்று கூட நினைத்திருந்தார்கள்.

அதற்காக சிம்ரன், மீனா ஆகியோருடன் பேச்சு நடத்தினார்கள் என்று கூட செய்திகள் வெளிவந்தன. ஆனால், இப்போது ஹன்சிகாவே அந்தப் பாடலில் நடித்துத் தர சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். அநேகமாக இன்னும் சில நாட்களில் அந்தப் பாடலின் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

அதிரடியான நடனப் பாடலாக இந்தப் பாடலைப் படமாக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். ஹன்சிகா திடீரென சிம்புவுடன் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது மிகப் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.


Post your comment





Related News
AAA படத்தில் ஹன்சிகா மற்றும் நயன்தாரா?
AAA படத்தில் சிம்புவுடன் ஜோடி சேரும் ஹன்சிகா?
சிம்புவுடன் நடிக்க ஹன்சிகாவுக்கு தடை போடுவது யார்?
இது நம்ம ஆளு படத்தில் நடிப்பது குறித்து மனம்திறந்த ஹன்சிகா!
சிம்புவின் வலிக்கு பலன் கிடைக்கும்: ஹன்சிகா வாழ்த்து
45 கோடி இருந்தால்தான் வாலு ரிலீஸ் ஆகுமாம்..!
நயன்தாரா-ஹன்சிகாவை உண்மையாகவே காதலித்தாராம் சிம்பு!
சிம்பு படத்தில் இனி நடிக்க மாட்டேன்: ஹன்சிகா பேட்டி
நேற்று சிம்பு - ஹன்சிகா..! இன்று சித்தார்த் - சமந்தா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions