புதிய உற்சாகத்துடன் சிம்பு!

Bookmark and Share

புதிய உற்சாகத்துடன் சிம்பு!

சிம்புவைப் பொறுத்தவரை டேக் ஆர்ட்டிஸ்ட் என்ற நல்ல பெயர் உண்டு. அதை தக்க வைத்துக்கொள்ளும் வகையில், எத்தனை ரிஸ்க்கான காட்சி என்றாலும் அவர் சிங்கிள் டேக்கில் ஓகே செய்து கொண்டும் வருகிறார்.

தற்போது இது நம்ம ஆளு, வாலு படங்களில் நடித்துள்ள சிம்பு அடுத்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை அடுத்து மீண்டும் கெளதம்மேனன் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை முதலில் சட்டென்று மாறுது வானிலை என்ற பெயரில்தான் சிம்புவை வைத்து இயக்கினார் கெளதம்மேனன். விஜய், சூர்யா இருவரும் அவரை கைவிட்ட நேரத்தில் சிம்புதான் கெளதமுக்கு தக்க சமயத்தில் நானிருக்கிறேன் என்று கைகொடுத்தார்.

அதேசமயம், அந்த நேரத்தில் அஜித்தும் கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்க முன்வந்ததால், அப்பட வேலைகளில் இறங்கியதால் சட்டென்று மாறுது வானிலை படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது மீண்டும் தொடங்கி விட்டது.

அதோடு, அந்த டைட்டிலுக்கு ஆரம்பத்திலேயே பிரச்சினை ஏற்பட்டதால், இப்போது அச்சம் என்பது மடமையடா என்ற எம்ஜிஆர் பட பாடல் வரியை டைட்டிலாக்கியிருக்கிறார் கெளதம்மேனன்.

மேலும், இந்த படத்தை பெரிதாக எதிர்பார்க்கும் சிம்பு, ஒவ்வொரு காட்சியிலும் அதிக ஆர்வத்துடன் நடிக்கிறாராம். குறிப்பாக, நள்ளிரவு படப்பிடிப்பு முடிந்து, அதிகாலை 5 மணிக்கே படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று சொன்னாலும், சில மணி நேரங்கள் மட்டும் தூங்கி விட்டு முதல் ஆளாக ஸ்பாட்டில் ஆஜராகி விடுகிறாராம்.

சிம்புவின் இந்த ஆர்வம் அப்பட யூனிட்டையே ஆச்சர்யப்படுத்தியுள்ளதாம். இதேபோல் செல்வராகவன் இயக்கும் பட வேலைகளிலும் புதிய உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகிறாராம் சிம்பு.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions