திரையுலகை ஆளவரும் குறளரசன்!

Bookmark and Share

திரையுலகை ஆளவரும் குறளரசன்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்திருக்கும் ரொமாண்டிக் காமெடி திரைப்படம் இது நம்ம ஆளு. இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பியும் டி.ராஜேந்திரனின் இளைய மகனுமான குறளரசன் இசையமைப்பாளராக திரையுலகில் காலடி எடுத்து வைக்கிறார்.

இதற்குமுன்பே இவர் அலை படத்தில் சிம்புக்கு தம்பியாக நடித்துள்ளார். எனினும் இசையமைப்பாளராக இவர் அறிமுகமாகும் முதல் படம் இதுவேயாகும். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மற்றும் இசை பிரியர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவரது தந்தையே ஒரு பிரபல இசையமைப்பாளர் என்றாலும் தனது இசையில் தனக்கென ஒரு ஸ்டைலை கடைபிடித்து, அதில்  ஜொலிக்கத் தொடங்கியுள்ளார். இவரது முதல் படமான இது நம்ம ஆளு, வரும் மே 27 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. திரை உலகில் தனது தந்தை மற்றும் அண்ணனை போல இவரும் பல ஆண்டுகள் ராஜ்ஜியம் செய்து வெற்றிபெற வாழ்த்துவோம். 

 


Post your comment





Related News
சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா?
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions