சிம்புவுக்கு இனி மேலாவது மாற்றம் கிடைக்குமா...?

Bookmark and Share

சிம்புவுக்கு இனி மேலாவது மாற்றம் கிடைக்குமா...?

சிம்பு கடைசியாக நாயகனாக நடித்த 'போடா போடி' படம் 2012ம் ஆண்டு வெளிவந்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்த மாதம் சிம்பு நீண்ட காலமாக நடித்து வந்த ’வாலு’ படம் வெளியாக உள்ளது.

அந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ’இது நம்ம ஆளு’ படம் வெளியாக உள்ளது. இந்தப் படங்கள் வெளிவருவதற்கு முன்பே சிம்பு அடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் ஆரம்பமாகி பின்னர் திடீரென நிறுத்தப்பட்ட படத்தை மீண்டும் தொடங்க உள்ளார்கள். இந்தப் படத்தில் சிம்புவும், பல்லவி சுபாஷும் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை கௌதம் மேனன் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு அஜித்திடம் இருந்து அழைப்பு வந்ததால் இந்தப் படத்தை அப்படியே போட்டுவிட்டு ’என்னை அறிந்தால்’ படத்தை இயக்கப் போய்விட்டார்.

இப்போது இந்தப் படத்தை மீண்டும் தூசி தட்டி எடுக்க உள்ளார்கள். இந்தப் படத்துடன் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் ஆரம்பமாக உள்ளதாம்.

நேற்று வந்த சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி முதல் உச்சத்தில் போய்க் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பல திறமைகளை தனக்குள் வைத்திருக்கும் சிம்பு இனிமேலாவது வெற்றிகரமான பாதை அமையுமா என்பதுதான் அவருடைய ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இதை சிம்பு புரிந்து கொண்டால் சரி... 


Post your comment





Related News
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
கமலுக்கு பேரனாகும் சிம்பு
சிம்பு படத்தின் இசையமைப்பாளர் இவரா?
மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
சீமானுடன் கைகோர்க்கும் சிம்பு
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions