சிம்புவுக்கு புதிய நம்பிக்கை!

Bookmark and Share

சிம்புவுக்கு புதிய நம்பிக்கை!

கெளதம்மேனன்-ஹாரிஸ்ஜெயராஜ் ஆகிய இருவருக்கும் மின்னலே படத்தில் இருந்தே நல்லதொரு கெமிஸ்ட்ரி இருந்து வந்தது. அந்த வகையில், கெளதம்மேனனின் பல படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களாக கொடுத்து வந்தார் ஹாரிஸ்.

ஆனால், ஒருகட்டத்தில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்க வைத்தார் கெளதம்மேனன்.

சிம்பு-த்ரிஷா ஜோடி சேர்ந்த அந்த படமும், ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களும் பெரிய அளவில் இளவட்ட ரசிகர்களை கவர்ந்தது. அந்த வகையில், கெளதம்மேனனுக்கும், சிம்புவுக்கும் விண்ணைத்தாண்டி வருவாயா மறக்க முடியாத படமாக அமைந்தது.

இந்த நிலையில், அஜீத்தை வைத்து தான் இயக்கிய என்னை அறிந்தால் படத்திற்கு மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜையே இசையமைக்க வைத்த கெளதம்மேனன், அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ஏ.ஆர்.ரகுமானிடம் சென்றிருக்கிறார்.

இப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இன்னொரு பாகம் போன்ற கதையில் உருவாவதால் அவரது இசைதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறாராம் கெளதம்.

ஆனால் இந்த படத்திற்குள் ஏ. ஆர்.ரகுமான் வந்திருப்பது சிம்புவுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறதாம். ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா மெகா ஹிட் என்பதோடு, சமீபகாலமாக தான் நடித்த படங்களே தியேட்டருக்கு வரமுடியாமல் அல்லாடிக்கொண்டு கிடக்கும் இந்த நேரத்தில் கெளதம்மேனன், ஏ.ஆர்.ரகுமான் என்ற இரண்டு நல்ல ராசிக்காரர்கள் கூட்டணியில் தானும் இருப்பதால், அவர்களது ராசி தன்னையும் கரைசேர்த்து விடும் என்ற முழு நம்பிக்கை அவருக்கு ஏற்பட்டுள்ளதாம்.


Post your comment





Related News
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions