சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் விருந்து

Bookmark and Share

சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் விருந்து

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'. முதன்முறையாக சிம்பு மூன்று தோற்றங்களில் நடித்து வரும் இப்படத்தில் மதுர மைக்கேல் கதாபாத்திரத்தைத் தொடர்ந்து அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்திற்கான பர்ஸ்ட் லுக், டீசர் இவற்றுடன் 'ட்ரெண்ட் சாங்' எனத் தொடங்கும் ஒற்றைப்பாடல் ஒன்றையும் வெளியிடப் போவதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதுதவிர 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் டிரெய்லரை வெளியிடப் போவதாகவும் இது தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா- சிம்பு கூட்டணியில் வெளியான 'லூசு பெண்ணே', எவன்டி உன்ன பெத்தான்' பாடல்கள் ஹிட்டடித்ததால் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தின் 'ட்ரெண்ட் சாங்' பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஜி.வி.பிரகாஷுக்கு இன்னும் 10 நாட்கள் தான் இருக்கு
பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பிடித்த தமிழ் படம் எது தெரியுமா?
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
பிரபல இசையமைப்பாளரின் பிறந்தநாளுக்கு சிம்பு போட்ட பிளான்
சிம்புவின் AAA முதல் பாக கிளைமேக்ஸில் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்
சிம்புவின் AAA படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் பிரபல இயக்குனரின் அப்பா- யார் தெரியுமா?
சிம்பு கூறிய ஐடியாவால் தான் இந்த திடிர் அறிவிப்பு - இயக்குனர் ஆதிக்
சிம்புவின் அஸ்வின் தாத்தா டீஸர் எப்படி- இதோ விமர்சனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions