சிம்பு – ஆதிக் இணையும் படம் குறித்த இசை அப்டேட் இன்று வெளியாகிறது!

Bookmark and Share

சிம்பு – ஆதிக் இணையும் படம் குறித்த இசை அப்டேட் இன்று வெளியாகிறது!

நடிகர் சிம்பு அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப்போவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இப்படத்தில் சிம்பு முதல்முறையாக மூன்று வித்தியாசமான ரோல்களில் நடிக்கவுள்ளார்.

இப்படத்துக்கு ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அதிவிரைவில் மதுரையில் தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions