அஜித்தை உதறி தள்ளி வேறொரு நடிகருக்கு ரசிகரான சிம்பு

Bookmark and Share

அஜித்தை உதறி தள்ளி வேறொரு நடிகருக்கு ரசிகரான சிம்பு

சிம்பு அஜித்தின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தன்னுடைய படம் ரிலீசாகும்போதுகூட முதல்நாள் முதல் காட்சி பார்க்காத சிம்பு, அஜித் படம் வெளியாகும் முதல் நாள், முதல் காட்சியே பார்க்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர். அதுமட்டுமில்லாமல், இதுவரை சிம்பு நடித்த படங்களில் ஏதாவது ஒரு காட்சியில் தான் அஜித்தின் தீவிர ரசிகன் என்பதுபோல் காட்சிப்படுத்திக் கொள்வார்.

சமீபத்தில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளங்களில் உரையாடிய சிம்பு, இனிமேல் தன்னுடைய படங்களில் அஜித்தின் பெயரை பயன்படுத்தப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார். அதன்படி, சிம்பு தற்போது நடித்து வரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் அஜித்தை குறிப்பிடும்படியான எந்தவொரு காட்சியையும் பயன்படுத்தவில்லையாம்.மாறாக, இப்படத்தில் சிம்பு வேறொரு நடிகரின் ரசிகராக நடிக்கிறாராம். அது யாரென்றால், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடலாசிரியர், பாடகர் என சினிமாவில் பன்முகம் கொண்ட சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தானாம். இந்த படத்தில் தன்னுடைய அப்பாவுக்கு ரசிகராக சிம்பு நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

சிம்பு இந்த படத்தில் ‘மதுர மைக்கேல்’ என்ற கதாபாத்திரத்தில் 80-களில் உள்ள கெட்டப்புகளில் நடித்துள்ளார். இந்த கெட்டப்பில் வரும் சிம்புதான் டி.ஆருக்கு ரசிகனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா என இரு கதாநாயகிகள் ஏற்கெனவே ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், ஒரு நாயகி தேடுதல் படலம் நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.


Post your comment





Related News
என்னுடைய படத்தில் சிம்புவா? அஜித்தா? - உண்மையை போட்டுடைத்த மோகன் ராஜா.!
ரசிகர்களுக்காக இதை செய்தாரா சிம்பு?
அஜித் பிறந்தநாளில் புது பட டைட்டிலை வெளியிடும் சிம்பு!
கிரிக்கெட் போட்டிக்கு எதிரான அஜித்தின் கருத்துக்கு சிம்பு ஆதரவு!
டிவிட்டரில் அஜித் பட டயலாக்கை சொன்ன சிம்பு!
விஜய், அஜித் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்
என் திருமணம் ஆண்டவன் முடிவு படி நடக்கும்: சிம்பு
அஜீத் பாணியில் சிம்பு
அஜித்தின் பில்லா 2 : காத்திருக்கும் சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions