விஜய், அஜித் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Bookmark and Share

விஜய், அஜித் ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மற்றொருவரை தரக்குறைவாக விமர்சித்தலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற நடிகர் சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் விஜயின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது ரசிகர்களுக்கு இனிய செய்தியாக, புலி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜயையும், அவரது ரசிகர்களையும் கிண்டலடிக்கும் விதமாக, அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் #VijayTheCurseOfCinema என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

விஜய் அல்லது அஜித் அவர்களின் உண்மையான ரசிகன், இத்தகைய காரியத்தை செய்ய மாட்டான். இதுபோன்ற உங்களது நடவடிக்கைகள், உங்கள் அபிமான நடிகர்களுக்கே, பாதகமாக முடியும் என்பதை மறந்துவிடக்கூடாது என்று சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தல அஜித்தின் ரசிகனாகிய நான், உங்களிடம் இந்த கோரிக்கையை, அஜித் ரசிகர்களிடம் வேண்டுகோளாக வைப்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions