அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி அறிவிப்பு

Bookmark and Share

அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘இது நம்ம ஆளு’ படம் ஒருவழியாக வருகிற மே 27-ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகிவரும் மற்றொரு படமான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தையும் விரைவில் வெளியிட தயாராகி வருகின்றனர்.

கவுதம்மேனன் இயக்கியுள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தின் சிங்கிள் பாடல் மற்றும் டீசர், டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் மொத்த பாடல்களையும் வருகிற ஜுன் 17-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இதையடுத்து ஜூலை 15-ந் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். எனவே, இந்த வருடம் சிம்பு ரசிகர்களுக்கு குறைந்த இடைவெளியில் இரட்டை விருந்து கொடுக்கவுள்ளார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
எனக்கு அந்த நிலைமைகள் இதுவரை ஏற்படவில்லை - ஆண்ட்ரியா
கவர்ச்சியாக நடிக்க மறுக்கும் ஆண்ட்ரியா
நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால்? - பிரபல நடிகை ஓபன் டாக்.!
விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா? கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.!
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு
தனுஷ், த்ரிஷா, டிடியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் ரகசிய திருமணமா- சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions