சிம்பு - அனிருத் மீது மீண்டும் ஒரு வழக்கு

Bookmark and Share

சிம்பு - அனிருத் மீது மீண்டும் ஒரு வழக்கு

நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு இசையமைத்தவர் பிரபல இசையமைப்பாளர் அனிருத் என்ற தகவல் வெளியானது. இந்த ‘பீப்’ பாடலுக்கு பெண்கள் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் பெண்கள் அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆபாச ‘பீப்’ பாடல் விவகாரம் தொடர்பாக கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் சிம்பு, அனிருத் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது ஆபாச பாடல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் சக்திகனி, தூத்துக்குடி 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். 

அதில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலும் வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் பாடிய நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி காமராஜ், சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மார்ச் மாதம் 7–ந் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தூத்துக்குடி மத்திய பாகம் போலீசாருக்கு உத்தரவிட்டார். 

இதையடுத்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், நடிகர் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது 509 (பெண்களை இழிவுபடுத்துதல்), 67 (இன்டர்நெட்டில் வெளியிட்டு குற்றம் சுமத்துதல்) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Post your comment





Related News
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்
மீண்டும் சிம்புவுடன் கைகோத்த அனிரூத்!
சிம்புவுடன் மீண்டும் இணைவதில் என்ன தப்பு? அனிருத் பேட்டி
சிம்புவுடன் சேர்ந்து பணிபுரிவதில் என்ன தப்பு என்று கேட்கிறார் அனிருத்
பீப்பாடல் விவகாரம்: சிம்பு, அனிருத் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!
பீப்பாடல் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு, அனிருத்!
பீப் பாடல் சர்ச்சை : சிம்பு, அனிருத் ஜனவரி 4க்குள் கைதாக வாய்ப்பு
ஆபாச பாடல் காரணமாக சிம்பு-அனிருத்தின் 6 படங்கள் முடங்கின
சிம்பு பாடலை வலைதளத்தில் வெளியிட்ட நடிகரை நெறுங்கியது போலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions