போலீசாரிடம் நாளை மறுநாள் சிம்பு-அனிருத் ஆஜர் ஆவார்களா?

Bookmark and Share

போலீசாரிடம் நாளை மறுநாள் சிம்பு-அனிருத் ஆஜர் ஆவார்களா?

அனிருத் இசையில் சிம்பு பாடியதாக வெளியான ஆபாச பாடல் பெண்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இருவரையும் கண்டித்து போராட்டங்கள் நடக்கின்றன. சேலம், தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் சிம்பு, அனிருத் உருவப்பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்துகிறார்கள்.

மாதர் சங்கங்கள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்பு வீட்டின் முன்பும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இருவரையும் கைது செய்ய வற்புறுத்தி போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன.

கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிம்பு-அனிருத் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நாளை மறுநாள்(19-ந்தேதி) இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனும் அனுப்பி இருக்கிறார்கள். இதனால் அவர்கள் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபோல் சென்னை போலீசாரும் வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

சைபர் கிரைம் போலீஸ் மூலம் ஆபாச பாடலில் உள்ள குரல் சிம்புவுடையதுதானா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை போலீசார் சம்மனை ஏற்று 19-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் கொடுப்பதா, வேண்டாமா? என்று சிம்பு-அனிருத் ஆகிய இருவரும் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தங்களுக்கு பதில் வக்கீல்களிடமே பதில் மனுக்களை கொடுத்து அனுப்பி வைக்கலாமா? என்றும் ஆலோசிக்கிறார்கள்.

இதுகுறித்து கோவை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஆபாச பாடல் விவகாரத்தில் சிம்புவும், அனிருத்தும் 19-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பி இருக்கிறோம்.

இதனை ஏற்று அவர்கள் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சிம்புவின் குரலை பதிவு செய்து ஆபாச பாடலில் இருப்பது அவரது குரல்தானா? என்று ஆய்வு செய்யப்படும்.

அதன் பிறகு புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்’’ என்றார். போலீசில் ஆஜராகும்போது இருவரும் கைது செய்யப்படுவார்களா? என்று கேட்டபோது, ‘‘அதுபற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது’’ என்று கூறிவிட்டார். 

 


Post your comment





Related News
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்
மீண்டும் சிம்புவுடன் கைகோத்த அனிரூத்!
சிம்புவுடன் மீண்டும் இணைவதில் என்ன தப்பு? அனிருத் பேட்டி
சிம்புவுடன் சேர்ந்து பணிபுரிவதில் என்ன தப்பு என்று கேட்கிறார் அனிருத்
பீப்பாடல் விவகாரம்: சிம்பு, அனிருத் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!
பீப்பாடல் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு, அனிருத்!
சிம்பு - அனிருத் மீது மீண்டும் ஒரு வழக்கு
பீப் பாடல் சர்ச்சை : சிம்பு, அனிருத் ஜனவரி 4க்குள் கைதாக வாய்ப்பு
ஆபாச பாடல் காரணமாக சிம்பு-அனிருத்தின் 6 படங்கள் முடங்கின








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions