அனிருத்துக்கும் இந்த பாடலுக்கும் சம்மந்தம் இல்லை - சிம்பு பரபரப்பு விளக்கம்

Bookmark and Share

அனிருத்துக்கும் இந்த பாடலுக்கும் சம்மந்தம் இல்லை - சிம்பு பரபரப்பு விளக்கம்

பீப் பாடல் அதிகாரப்பூர்வமாகவே வெளியாகாத ஒன்று. அதற்காக என்னை ஏன் இப்படி கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. என்னை அதிகமாகவே காயப்படுத்தி விட்டார்கள்.

இந்தப் பாட்டுக்கும் அனிருத்துக்கும் சம்பந்தம் இல்லை. இது என் பாட்டு, எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார். சமீபத்தில் வெளியான பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு மற்றும் அனிருத் இருவர் மீதும் வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

மேலும் இருவருக்கும் கோவை போலீசார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். இந்த நிலையில் சிம்பு தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வாட்ஸ் ஆப்பில் வெளியாகியுள்ளது.

அதில் இடம்பெற்றிருக்கும் சிம்புவின் பேட்டி:

முதல்ல நான் ஒன்னு கேட்கிறேன் இந்தப் பாடல் எந்த டிவி சேனல், ரேடியோவிலாவது இந்தப் பாடல் ப்ளே ஆகுதா? அப்புறம் ஏன் என்னைக் கேள்வி கேட்கறீங்கன்னு எனக்குப் புரியலை.

இது என்னுடைய பாட்டு இது தொடர்பான எல்லாவற்றையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் இதில் அனிருத்தை கொண்டு வர வேண்டாம்
தமிழ் சினிமாவிலேயோ அல்லது நான் ஒரு ஆல்பம் ரிலீஸ் பண்ணி இந்தப் பாடலை வெளியிட்டு இருந்தாலோ நீங்கள் இதைப் பற்றி கேள்வி கேட்கலாம். ஆனா இது எதையுமே நான் செய்யலை.

தமிழ் சினிமாவைப் பத்தி எல்லோருக்கும் தெரியும் எவண்டி உன்னப் பெத்தான் கையில கிடைச்சான் செத்தான்னு நான் எழுதினேனே தவிர எவடி உன்னைப் பெத்தான்னு நான் கேட்கல. ஒரு விஷயத்தை பப்ளிக் பிளாட்பாரம்ல எப்படி கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று எனக்கு நல்லா தெரியும். தெரியாம வளர்ந்த பையன் நான் கிடையாது.

இந்தப் பாடலை எல்லோரும் எதிர்க்கிறாங்க. ஆனா இதுல காமெடி என்னன்னா வெட்டு மாமா அவளை, அடிடா அவளை கொல்லுடா அவளை என்று பெண்களைத் திட்டித் தீர்க்கும் பாடல்கள் எல்லாமே இந்த தமிழ் சினிமாவில் வந்து இருக்கு.

நான் பெண்களுக்கு ஆதரவாகத் தான் இந்தப் பாடல் வரிகளை எழுதி இருக்கிறேன்.பொண்ணுங்களை நீ திட்டாத மாமா உன்ன நீயே திட்டிக்க மாமா உன் காதல் தோல்விதான் உன் வாழ்க்கையோட வெற்றி. அப்படின்னு நான் பொண்ணுங்களுக்கு ஆதரவாத் தான் இந்தப் பாட்டையே எழுதினேன்.

இந்தப் பாடலை நான் அதிகாரப்பூர்வமா ரிலீஸ் பண்ணலை.நான் சும்மா பண்ணி வச்சு வீட்டில வச்சிருந்ததை எடுத்து ரிலீஸ் பண்ணிட்டாங்க. இணையதளம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் காரணமாக யாருடைய விவரங்களையும் இன்று எளிதாக எடுத்து விடும் நிலை உருவாகி இருக்கிறது.

அனிருத்திற்கும் இந்தப் பாடலிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தப் பாடலை நான் அதிகாரப்பூர்வ வெளியிட்டு இருந்தால் இதற்குப் பதில் சொல்லலாம். என்னுடைய கிரியேட்டிவிட்டி முழுதாக முடிவடையாத நிலையிலேயே வெளியாகி விட்டது. இதைப் போல என்னிடம் நூற்றுக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன.

நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் கடவுளுக்கு மட்டுமே பயப்படுவேன். ஒரு கெட்ட வார்த்தையை பயன்படுத்தியதைப் பற்றி இங்கு எல்லோரும் விமர்சிக்கிறீர்கள் ஆனால் நான் அம்மா பத்தியோ, மனைவி பத்தியோ பாடின பாடல்களும் இங்கேதான் இருக்கிறது.

எனக்குத் தெரிந்து அதிகமான கெட்ட வார்த்தைகள் தமிழில் தான் இருக்கிறது. இந்தப் பாடல் குழந்தைகளை கெடுத்து விடும் என்று கூறுகிறீர்கள். ஆனால் அதே இணையதளத்துல தான் ஆபாசமான வீடியோக்கள் இருக்கின்றது. அதனை குழந்தைகள் பார்த்து கெட்டுப்போக மாட்டார்களா?

தம் அடிக்காதே, தண்ணி அடிக்காதே, பொண்ணுங்களை திட்டாதே என்று நான் பெண்களுக்கு ஆதரவாகத் தான் இந்த பாடலை பாடியிருக்கிறேன் இந்தப் பாடலின் மூலம் என்னுடைய இமேஜை எல்லா வகையிலும் கெடுத்து விட்டார்கள். இதற்கு மேல் என்ன இருக்கிறது கெடுக்க. இந்த வழக்கில் என்னைச் சுற்றி உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இந்த வழக்கை பார்த்துக் கொள்கிறார்கள்.

தப்புப் பண்ணியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டு இருப்பேன். நான் தப்பு செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்டு இருப்பேன். ஆனா நான் எந்தத் தப்பும் பண்ணலையே. இந்த வழக்கைப் பொறுத்தவரை இப்படி ஒரு குடும்பம் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது என்னுடைய பூர்வஜென்ம அதிர்ஷ்டம் என்று கூறலாம்.

27 பாடலாசிரியர்கள் எனக்கு எதிராக அறிக்கை விட்டு இருக்கிறார்கள். ஆனா நான் வேணும்னே இதைப் பண்ணல. மேலும் பெண்களைப் பத்தி நானா எதுவும் சொல்லலை. நான் அவங்க கருத்தை மதிக்கிறேன் ஆனால் நான் அதிகாரப்பூர்வமாக இந்தப் பாடலை வெளியிடாமல் அவங்க கருத்தை சொல்வது தப்பு
சில பேர் கூறுகிறார்கள் நான் பப்ளிசிட்டிக்காக இந்த மாதிரி ஒரு பாடலை வெளியிட்டு இருக்கிறேன் என்று.

மழை, வெள்ளத்தால் மக்கள் கஷ்டப்படும் சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு பாடலை நான் ரிலீஸ் பண்ணுவேனா?. பப்ளிசிட்டிக்காக இந்த மாதிரி பண்ண வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏன் தமிழ்நாட்ல சிலம்பரசனை யாருக்கும் தெரியாதா?

இந்தப் பாடலை நான் அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் பண்ணவில்லை என்று சொல்லியும் என் உருவப் பொம்மையை எரிக்கிறீங்க, எனக்கு எதிராப் போராட்டம் நடத்துறீங்க. நான் கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடுகிறேன் என்னுடைய டாக்டர் சொல்றார் இந்த மாதிரி கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடினா இன்னும் சில வருடங்கள்ள எந்திரிச்சு நடக்கவே முடியாதுன்னு.

ஆனா நான் மக்கள் சந்தோசத்துக்காக அதையும் பொருட்படுத்தாமல் நடனம் ஆடுகிறேன். 30 வருஷம் தமிழ் சினிமாவிற்காக கஷ்டப்பட்ட என்னை யாரோ சொல்கிறார்கள் என்று அந்தப் பாடலை கேட்காமல் கூட என்னை எதிர்க்கிறீர்கள்.

இப்போ இருக்கிற சூழ்நிலையில் ரேப் பண்ணுனவன் கூட வெளியில் வந்திடுறான். இந்தப் பாடலை நான் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்று கூறியும் என்னைக் கடுமையாக விமர்சித்து விட்டனர். கடுமையான விமர்சனங்களால் நான் காயப்பட்டு விட்டேன்.

தமிழ் சினிமாவுல யாரும் எனக்கு சப்போர்ட் செய்யலை. என்கூட இருந்தவங்களே என்னை விட்டுப் போய்ட்டாங்க. ஆனா தமிழ் மக்கள் எனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதை நீங்க எப்படி வேணா எடுத்துக் கோங்க ஆனா இது இப்படித்தான் நடந்தது".

என்று நடிகர் சிம்பு தனது விளக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார்.


Post your comment

Related News
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்
மீண்டும் சிம்புவுடன் கைகோத்த அனிரூத்!
சிம்புவுடன் மீண்டும் இணைவதில் என்ன தப்பு? அனிருத் பேட்டி
சிம்புவுடன் சேர்ந்து பணிபுரிவதில் என்ன தப்பு என்று கேட்கிறார் அனிருத்
பீப்பாடல் விவகாரம்: சிம்பு, அனிருத் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!
பீப்பாடல் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு, அனிருத்!
சிம்பு - அனிருத் மீது மீண்டும் ஒரு வழக்கு
பீப் பாடல் சர்ச்சை : சிம்பு, அனிருத் ஜனவரி 4க்குள் கைதாக வாய்ப்பு
ஆபாச பாடல் காரணமாக சிம்பு-அனிருத்தின் 6 படங்கள் முடங்கின
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions