ஆபாச பாடல் காரணமாக சிம்பு-அனிருத்தின் 6 படங்கள் முடங்கின

Bookmark and Share

ஆபாச பாடல் காரணமாக சிம்பு-அனிருத்தின் 6 படங்கள் முடங்கின

அனிருத் ‘கொலைவெறி’ பாடலில் பிரபலமாகி விஜய்யின் கத்தி, ஆர்யாவின் இரண்டாம் உலகம், தனுசின் வேலையில்லா பட்டதாரி, மாரி, சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், காக்கி சட்டை, மான்கராத்தே, படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இணையாக உயர்ந்தார். சமீபத்தில் வந்த அஜித்தின் ‘வேதாளம்’ விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடிதான்,’ தனுசின் ‘தங்க மகன்’ படங்களுக்கும் இசையமைத்து இருந்தார்.

சூர்யாவை வைத்து ஹரி இயக்கி வரும் சிங்கம்-3, தனுஷ் நடிக்கும் கொடி படங்களுக்கும் அனிருத்தை ஒப்பந்தம் செய்து இருந்தனர். மேலும் 3 புதிய தமிழ் படங்களிலும் 2 தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தம் செய்ய அவருடன் பேச்சு வார்த்தைகள் நடந்தன. ஆனால் திடீரென்று சிங்கம்-3 படத்தில் இருந்து அவரை நீக்கி விட்டனர். மேலும் 2 புதிய படங்களில் இருந்தும் நீக்கப்பட்டு விட்டார்.

தனுசின் ‘கொடி’ படத்தில் இருந்தும் அவரை நீக்குவதா? வேண்டாமா? என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆபாச பாடல் பிரச்சினை தொடர்பாக அவர் சென்னை திரும்பாமல் தொடர்ந்து கனடாவிலேயே தங்கி இருப்பதால் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களுக்கு இசையமைக்க முடியாமல் முடங்கியுள்ளன.

சிம்பு கைவசம் ‘இது நம்ம ஆளு, வேட்டை மன்னன், அச்சம் என்பது மடமையடா’ என்ற 3 படங்கள் உள்ளன. இவற்றில் ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது. இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். ‘வேட்டை மன்னன்’ படம் பாதியில் நிற்கிறது. நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார்.

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை கவுதம் மேனன் டைரக்டு செய்கிறார். இவர்கள் கூட்டணியில் வந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் வெற்றி பெற்றதால் இந்த படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது.

ஆபாச பாடல் பிரச்சினையால் படப்பிடிப்புகளிலும் குரல் பதிவு, இசை கோர்ப்பு உள்ளிட்ட தொழில் நுட்ப வேலைகளிலும் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவர் தரப்பிலும் 6 படங்களின் வேலைகள் முடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்
மீண்டும் சிம்புவுடன் கைகோத்த அனிரூத்!
சிம்புவுடன் மீண்டும் இணைவதில் என்ன தப்பு? அனிருத் பேட்டி
சிம்புவுடன் சேர்ந்து பணிபுரிவதில் என்ன தப்பு என்று கேட்கிறார் அனிருத்
பீப்பாடல் விவகாரம்: சிம்பு, அனிருத் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு!
பீப்பாடல் சர்ச்சைக்கு பிறகு மீண்டும் இணையும் சிம்பு, அனிருத்!
சிம்பு - அனிருத் மீது மீண்டும் ஒரு வழக்கு
பீப் பாடல் சர்ச்சை : சிம்பு, அனிருத் ஜனவரி 4க்குள் கைதாக வாய்ப்பு
சிம்பு பாடலை வலைதளத்தில் வெளியிட்ட நடிகரை நெறுங்கியது போலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions