பீப் பாடல் விவகாரம் சிம்பு எந்த நேரத்திலும் கைதாகலாம்!

Bookmark and Share

பீப் பாடல் விவகாரம் சிம்பு எந்த நேரத்திலும் கைதாகலாம்!

ஆபாச பீப் பாடலை உருவாக்கி, பாடி, அது எனது தனிப்பட்ட விஷயம் என்று பிடிவாதமாக பேட்டி கொடுத்துள்ள சிம்புவைக் கைது செய்ய எந்தத் தடையும் என்று உயர் நீதிமன்றம் கூறிவிட்டதால், சிம்புவை எந்த நேரமும் போலீசார் கைது செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் சிம்புவின் குடும்பத்தினர் பதட்டமடைந்துள்ளனர். சிம்பு ரகசியமான இடத்தில் பதுங்கியுள்ளார்.

பீப் பாடல் விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையில், சிம்புவுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணை பிற்பகலில் மீண்டும் வழக்கை விசாரித்ததில் ஜனவரி 4-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார் நீதிபதி.

அதே நேரம் பீப் பாடலை பாடிய நடிகர் சிம்புவைக் கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என சென்னை நீதிபதி ராஜேந்திரன் அதிரடி உத்தரவிட்டார். இதனால் சிம்பு எந்த நேரமும் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது.

இதனிடையே கடந்த பத்து நாட்களாக தலைமறைவாக இருக்கும் சிம்பு, தனக்கு எந்த பயமும் இல்லை என்றும், சட்ட நடவடிக்கைகளைச் சந்திப்பேன் என்றும் கூறி வருகிறார். 

போலீஸின் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பாரா அல்லது இப்போதுள்ள தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்வாரா என்பது இன்று நள்ளிரவோ நாளையோ தெரிந்துவிடும்.


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?
ஆளப்போறான் தமிழன் பாடல் பாடகருக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் உள்ளே
பீப் சாங்கை தொடர்ந்து மீண்டும் ஒரு பாடலில் சிம்பு, அனிருத் - சூப்பர் தகவல் உள்ளே !
சிம்புவின் TrendSong எப்படி வந்திருக்கிறது தெரியுமா- சிம்புவே சொல்கிறார்
பைரவா எல்லா பாடல் வரிகளும் இதோ!
சிம்பு வாழ்கையில் இன்று மறக்கமுடியாத ஒருநாள் ஏன் தெரியுமா?
கோவை கோர்ட்டில் ஆஜராகுமாறு அனிருத்துக்கு மீண்டும் சம்மன்
பீப் பாடலை பாடியது ஏன்? சிம்பு விளக்கம்!
பீப்பாடல் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை: சிம்பு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions