தன் மீது கொடுக்கப்படும் புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது சிம்பு மனு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

Bookmark and Share

தன் மீது கொடுக்கப்படும் புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது சிம்பு மனு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

நடிகர் சிம்பு பாடிய ஆபாச ‘பீப்’ பாடல் கடந்த மாதம் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்ததாக தகவல் வெளியாகின.

இதையடுத்து, சிம்புக்கு எதிராக பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பலர் போராட்டங்கள் நடத்தினார்கள். கோவை, ரேஸ்கோர்ஸ் போலீசில் பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில், சிம்பு, அனிருத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அதேபோல, சென்னை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், மற்றொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதுபோல், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பல்வேறு தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிம்பு மற்றும் அனிருத் மீது அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், கடந்த வாரம் தமிழகம் டி.ஜி.பி.யிடம், நடிகர் சிம்பு தரப்பில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில், ஒரு குற்றத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்யமுடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது.

ஆனால், ஆபாச பாடலை பாடியதாக ஒரு குற்றச்சாட்டுக்கு, தமிழகம் முழுவதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில், என் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறு வழக்குப்பதிவு செய்வது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது.

கோவையில் ஏற்கனவே என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், புதிதாக என் மீது வழக்குப்பதிவு செய்வது தேவையற்றது. 

எனவே, ஆபாச பாடல் பாடியதாக என் மீது கொடுக்கப்படும் புகார் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று எல்லா மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

ஆனால், தமிழக டி.ஜி.பி. இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்பதால், சென்னை ஐகோர்ட்டில் நடிகர் சிம்பு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

அதில், ‘ஏற்கனவே என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், புதிதாக வழக்கு எதுவும் பதிவு செய்யக்கூடாது என்று எல்லா மாநகர போலீஸ் கமிஷனர்களுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பும்படி தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions