சிம்பு இயக்குநருடன் கைகோர்த்த ஆரவ்

Bookmark and Share

சிம்பு இயக்குநருடன் கைகோர்த்த ஆரவ்

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய `சைத்தான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆரவ்.

அதனைத் தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த அமோக வரவேற்பால் பிரபலமடைந்த ஈரவ், 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டிலேயே தங்கியிருந்து, பிக்பாஸ் டைட்டிலையும் வென்றார்.

100 நாட்கள் முடிந்து வெளியே வந்த ஆரவ் தனது அடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தார். இந்நிலையில், நேற்று தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, பிக்பாஸ்-க்கு பிறகு தனது முதல் படத்தை இயக்குநர் எஸ்.சரவணன் இயக்க இருப்பதாகவும், விஜய பார்கவி என்டர்டெயின்மெண்ட் அந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

இயக்குநர் சரவணன், சிம்புவை வைத்து `சிலம்பாட்டம்' படத்தையும், அடுத்ததாக `சிப்பாய்' என்ற படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா
பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்த சினேகன்
பிக்பாஸ் ரைசாவை கொண்டாட்டத்தில் ஆழ்த்திய விஷயம்..!
இத்தனை மனைவியா? பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்!
பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை!
பிக்பாஸ் ஷாரிக்கிற்கு மலேசிய ரசிகை செய்த விஷயம்- அவரே ஷாக் ஆகிட்டாராம்
பிக்பாஸ் Wild Cardல் நுழையும் மீனாட்சி ரட்சிதா? அவரே சொன்ன தகவல்
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
என்னை கலாய்ச்சதுக்கு நன்றி,சூப்பர்ஸ்டார் ஆவேன்! - பிக்பாஸ் ஷரீக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions