மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேரும் தீக்ஷா செத்!

Bookmark and Share

மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேரும் தீக்ஷா செத்!

தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை தீக்ஷா செத். சுசீந்திரன் இயக்கிய ராஜபாட்டை படத்தின் மூலம் விக்ரமுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால் இந்தப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. மேலும் இப்படியெல்லாம் கூடவா படம் எடுப்பார்கள் என்று கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது. அந்தப்படத்திற்கு பிறகு சிம்புவுடன் வேட்டை மன்னன் படத்தில் நடித்தார் தீக்ஷா.

ஆனால் அந்தப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்றே தெரியவில்லை. இந்தசூழலில் மீண்டும் சிம்புடன் நடிக்கும் வாய்ப்பு தீக்ஷாவிற்கு வந்துள்ளது. தனுஷ் தயாரிப்பில், அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கும் படத்தில், சிம்பு ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

தற்போது இப்படத்திற்கான வேலைகள் முழுமூச்சாக நடந்து வருகிறது. இதில் ஹீரோயினாக தீக்ஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படத்திற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் இந்த கோடையில் படத்தின் ஷூட்டிங்கும் ஆரம்பமாகும் என தெரிகிறது.


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
ரஜினிகாந்த் - விஜய் சேதுபதி படத்தின் முக்கிய அறிவிப்பு
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
கலைஞருக்கு மெரினாவில் இடம் தராதது பற்றி விஜய் சேதுபதி அதிரடி கருத்து
ஜுங்கா 4 நாட்கள் மொத்த வசூல், மலேசியாவில் பிரமாண்ட கலெக்‌ஷன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions