மீடியாதான் என்னை தாங்கிபிடித்தது ! - சிம்பு உருக்கம்

Bookmark and Share

மீடியாதான் என்னை தாங்கிபிடித்தது ! - சிம்பு உருக்கம்

சந்தானம் தயாரித்து நாயகனாக நடித்துள்ள படம் இனிமே இப்படித்தான். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை 10 மணி அளவில் சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில், கெளதம்மேனன், ராஜேஷ்.எம், சிம்பு, ஆர்யா, உதயநிதி, சந்தானம், தம்பிராமைய்யா, நரேன், ஆஷ்னா சவேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, சிம்பு பேசுகையில்,

கடந்த 2 வருசமா நான் நடிச்ச படம் எதுவும் ரிலீஸ் ஆகாததால எந்த விழாவுலயும் நான் கலந்துக்கிட்டதில்ல. கடைசியாக கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தோடு ஆடியோ பங்சனுக்கு வந்தவன், இப்ப இனிமே இப்படித்தான் படத்தோடு ஆடியோ பங்சனுக்குத்தான் வந்திருக்கேன்.

நான் சந்தானத்தை மன்மதன் படத்துல அறிமுகம் செய்தேன். அப்ப நிறைய எதிர்ப்பு இருந்தது. ஆனா இந்த பையன்கிட்ட நல்ல திறமை இருக்கு பெருசா வருவான்னு சொல்லி நடிக்க வச்சேன். இப்ப சந்தானம் பெருசா வளர்ந்து நிக்கிறாரு. சந்தோசமா இருக்கு. மேலும், எனக்கு டேலண்ட் கிடையாது. என்னோட டேலண்ட உருவாக்கினது எங்க அப்பாதான். இந்த உலகத்துல தட்டிவிட நிறையபேர் இருக்காங்க, ஆனா தட்டிக்கொடுக்கத்தான் ஆளில்லை.

ரெண்டு வருசமா என் படம் எதுவுமே திரைக்கு வராததால ரொம்ப கஷ்டப்பட்டேன். அதனாலதான் கடவுளைத் தேடிப்போனேன். சின்ன வயசுல இருந்தே நான் கஷ்டமின்னா என்னன்னு தெரியாமலேயே வளர்ந்தேன்.

ஆனா இந்த ரெண்டு வருசத்துல ஒரு சாதாரணமான மனுசனா இருந்து எல்லா கஷ்டத்தையும் அனுபவிச்சிட்டேன். எப்பவுமே நான் நடிச்சு சம்பாதிச்ச பணத்தை எங்க அம்மாகிட்டதான் கொடுப்பேன்.

ஆனா இப்ப என்னால கொடுக்க முடியல. அவங்கிட்ட செலவுக்கு பணம் கேட்கவே கஷ்டமா இருக்கு. இந்த நேரத்துல எனக்கு ஒரு நடிகையோட காதல் வந்தது.

ஆனா அவளும் என்னோட கஷ்டகாலத்தைப் பார்த்துட்டு விட்டுவிட்டு போயிட்டா. ஆக ஏற்கனவே எனக்குள் இருந்த கஷ்டம் மட்டுமில்லாம, காதலியும் விட்டுட்டு போன கஷ்டம் என்னை ரொம்ப வருத்தி எடுத்தது.

கடவுள் கஷ்டத்தை கொடுத்து நம்மள டெஸ்ட் பண்றான்னு நெனச்சிக்கிட்டேன். எல்லாமே போயி எங்கிட்ட உயிர் மட்டும்தான் இருந்தது. அப்பத்தான் கெளதம்மேனன் ஒரு படத்துல நடிக்க கூப்பிட்டாரு. போய் நடிச்சிக்கிட்டிருந்தப்ப, தல அஜித் படம் இயக்குற வாய்ப்பு அவருக்கு வந்தது.

அப்ப என்னை விட எங்க அப்பாதான் ரொம்ப பீல் பண்ணினாரு. அவர் இருந்த சூழ்நிலையில் அஜித் படம் இயக்கிறதையே பெருசா நெனச்சாரு. நானும் விட்டுக்கொடுத்தேன். அஜித்கூட அப்பாகிட்ட உங்க பையன் நல்லா வருவான் பீல் பண்ணாதீங்கன்னு சொன்னாரு.

அந்த நேரத்துல என்னோட சோகம் இன்னும் அதிகமானது. அப்பத்தான் நமக்காக வாழுறதை விட மற்றவங்களுக்காக வாழுறதுன்னு முடிவெடுத்தேன். இந்த ரெண்டு வருசத்துல மீடியா என்னைப்பத்தி நிறைய செய்தி எழுதினாங்க.

இன்னும் சொல்லப்போனா ஒரு படம்கூட வெளியாகாத நிலையில என்னைப்பத்தி ஏதாச்சும் செய்தி எழுதிக்கிட்டே இருந்ததால அவங்க என்னை தாங்கிப்பிடிச்சாங்கன்னுதான் சொல்லணும். இல்லேன்னா காணாமல் போயிருப்பேன் என்று உருக்கமாக பேசினார் சிம்பு.

 


Post your comment





Related News
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
சிம்பு வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வழக்கு தொடர்ந்துள்ளனர் - டி.ராஜேந்தர்
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions