சிம்பு ஜோடியை நீக்கிய கௌதம் மேனன்

Bookmark and Share

சிம்பு ஜோடியை நீக்கிய கௌதம் மேனன்

கௌதம் மேனன் ‘என்னை அறிந்தால்’ படத்தை தொடங்குவதற்கு முன்பாக சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை தொடங்கினார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக பல்லவி சுபாஷ் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அஜித்தை வைத்து ‘என்னை அறிந்தால்’ படத்தை இயக்க கௌதம் மேனன் சென்று விட்டார். இதனால் சிம்பு படம் கிடப்பில் இருந்தது.

‘என்னை அறிந்தால்’ படத்தை முடித்த பின்பு உடனே சிம்பு படத்தை தொடங்க ஆரம்பித்தார். இதற்கு ‘அச்சம் என்பது மடமையடா’ என்று பெயரும் அறிவித்தார். இதில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டுமே கௌதம் மேனன் படமாக்கி வந்துள்ளார். இந்நிலையில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வந்த பல்லவி சுபாஷ் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பல்லவி சுபாஷ் வட இந்தியாவில் பல்வேறு நாடகங்களில் நடித்து வந்திருக்கிறார். அஜித் படத்துக்காக சிம்பு படம் நிறுத்தப்பட்டதால், பல்லவி சுபாஷ் கொடுத்த தேதிகள் வீணானதாம். தற்போது தேதிகள் கேட்ட போது, நாடகங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டதால் பல்லவி சுபாஷால் சிம்பு படத்துக்கு தேதிகள் ஒதுக்க முடியவில்லை. இதனால் பல்லவி சுபாஷ் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பல்வேறு முன்னணி நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். 

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions