யார் சொன்னா சிம்பு திருந்துவாப்ல? : கொந்தளித்த கெளதம்மேனன்

Bookmark and Share

யார் சொன்னா சிம்பு திருந்துவாப்ல? : கொந்தளித்த கெளதம்மேனன்

'என்னை அறிந்தால்' படம் ஹிட்டான சந்தோஷத்தில் தனது பிறந்தநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடினார் இயக்குனர் கெளதம் மேனன். சரி அஜித் படம் தான் ஹிட்டாகி விட்டதே, இனி பாதியில் நிற்கும் சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' படத்தை மீண்டும் ஆரம்பித்து முடித்து விடலாம் என்று திட்டம் போட்டார்.

அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு தயாரா இருக்கச் சொல்லி கெளதமின் உதவியாளர்கள் மூலம் சிம்புவுக்கு தகவல் பறந்தது.சிம்புவும் சமத்துப் பிள்ளையாட்டம் நீங்க எப்போ கூப்பிட்டாலும் நான் ரெடி சார் என்று சொன்னார்.

அவருடைய உத்தரவாதத்தை நம்பி முதல்நாள் படப்பிடிப்பில் யூனிட்டே சிம்புவுக்காக காத்துக் கொண்டிருந்தது.நேரம் ஆக ஆக சிம்புவை காணவில்லை. வழக்கம் போல டேக்கா படப்பிடிப்புக்கு டேக்கா கொடுத்து விட்டார்.

அப்புறம் என்ன கடுப்பான கெளதம் மேனன் “இதுதான் லாஸ்ட் வார்னிங், இனிமே அவர் ஷூட்டிங் வரலேன்னா நான்பாட்டுக்கு படத்தை ட்ராப் பண்ணிட்டு போய்க்கிட்டே இருப்பேன். எத்தனை தடவை சொன்னாலும் திருந்தமாட்டேங்கிறாப்ல, யார் சொன்னா அவர் திருந்துவாப்ல என்று கொந்தளித்தாராம் கெளதம்.

அப்படி திருந்தியிருந்தா இந்த நேரத்துக்கு கையில் அரை டஜன் படங்களோட ஆள் இருக்கணுமே..?


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions