AYM படத்தில் சதீஷை கொன்றது ஏன்? கௌதம் விளக்கம்!

Bookmark and Share

AYM படத்தில் சதீஷை கொன்றது ஏன்? கௌதம் விளக்கம்!

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்கு பிறகு அண்மையில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிம்பு, மஞ்சிமா மோகன் கெமிஸ்ட்ரியை அடுத்து இந்த படத்தில் அதிகம் கவனம் ஈர்த்தது சதீஷின் கதாபாத்திரம்தான்.

இரண்டாம் பாதியில் இவர் இறந்துபோவதை தமிழ் ரசிகர்கள் எப்படியோ ஏற்றுக்கொண்டுவிட்டார்கள். அதேசமயம் இவர் உயிருடன் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது ரசிகர்களின் விருப்பம்.இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய கௌதம், ” சதீஷின் முடிவை நான் 10 நாட்கள்வரை யோசித்துதான் வைத்தேன்.

அப்பவும் இவர் உயிருடன் இருப்பதுபோன்றும் சிம்பு, இவரையும் மஞ்சிமாவையும் காப்பாற்றி வருவது போன்றும் கதையை மாற்ற நினைத்தேன். ஆனால் அந்த சமயத்தில் சதீஷ், கபாலி பட நடன அமைப்பில் பிசியாக இருந்தார். அவரால் வரமுடியாது என்று தெரிந்த பின்பே இந்த முடிவுக்கு வந்தேன்” என்றார்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions