ஜி.வி.பிரகாஷ் படத்தை மட்டமாக பேசினாரா சிம்பு? என்னதான் நடந்தது?

Bookmark and Share

ஜி.வி.பிரகாஷ் படத்தை மட்டமாக பேசினாரா சிம்பு? என்னதான் நடந்தது?

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்திருக்கும் அச்சம் என்பது மடமையடா படம் பல தடைகளுக்குபிறகு கடந்த வெள்ளியன்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படம் சென்னையில் ரூ. 5 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த வருடத்தில் அதிகம் வசூல் செய்த படங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் சிம்பு டிவிட்டரில், ” மக்களால் நிராகரிக்கப்பட்ட தோல்வி படங்களை எல்லாம் ப்ளாக்பஸ்டர் என கூறுகிறார்கள். அப்போ அச்சம் என்பது மடமையடா படத்தை என்னவென்று சொல்வீர்கள்” என கேட்டிருந்தார். இதை சிம்பு தனது அட்மின் மூலம் தெரிவித்திருந்தார்.

உடனே ஜி.வி.பிரகாஷ் நடித்து அண்மையில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தைதான் சிம்பு இப்படி பேசுகிறார் என இணையவாசிகள் கோத்துவிட்டார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், ஒரு முன்னணி இணையத்தளம் இப்படத்தின் வசூல் கணக்கை வெளியிட்டு இப்படத்துக்கு ஹிட் முத்திரை மட்டும் கொடுத்திருந்தது. இதைதான் டிவிட்டரில் சிம்பு மறைமுகமாக தாக்கியிருந்தார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions