நேற்று சிம்பு - ஹன்சிகா..! இன்று சித்தார்த் - சமந்தா?

Bookmark and Share

நேற்று சிம்பு - ஹன்சிகா..! இன்று சித்தார்த் - சமந்தா?

நடிகர் சித்தார்த் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்றாலும் அவருடன் யார் இணைந்து நடித்தாலும் அந்த நடிகைக்கும் சித்தார்துக்கும் காதல் என்ற கிசுகிசு வரும்.

ஸ்ருதிஹாசன் உட்பட பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட சித்தார்த் சில வருடங்களுக்கு முன் சமந்தா உடன் ஒரு படத்தில் சேர்ந்து நடித்தார். இவர்களை இணைத்தும் கிசுகிசுக்கள் வரத் தொடங்கின.

மக்கள் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாதநிலையில், அந்த செய்திகளை உண்மையாக்குவதுபோல், சித்தார்த் சமந்தா இருவரும் சேர்ந்து காளஹஸ்தி, திருப்பதி உட்பட பல கோயில்களுக்கு சென்றனர். எனவே விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று செய்திகள் வெளியாகத்தொடங்கின.

எதிர்பார்ப்புக்கு மாறாக சமந்தா நடிப்பில் பிஸியாகிவிட்டார். அது மட்டுமல்ல முன்பைவிட, படு கவர்ச்சியாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சித்தார்த்தை காதலிப்பவர் இப்படி கவர்ச்சியாக நடிக்கிறாரே என்னாச்சு சமந்தாவுக்கு? என்று திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்களே ஆச்சர்யப்பட்டனர்..

தற்போது ஒரு கோடி சம்பளம் வாங்குமளவுக்கு ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துக் கொண்டு தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்துவிட்ட இந்த நேரத்தில் கல்யாணம் செய்து கொள்ள சமந்தாவுக்கு விருப்பமில்லையாம். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions