சிம்புவின் வலிக்கு பலன் கிடைக்கும்: ஹன்சிகா வாழ்த்து

Bookmark and Share

சிம்புவின் வலிக்கு பலன் கிடைக்கும்: ஹன்சிகா வாழ்த்து

சிம்பு நடிப்பில் பல சிக்கல்களை கடந்து நாளை வெளியாக விருக்கும் படம் ‘வாலு’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் தயாரித்திருந்த இப்படத்தை டி.ஆர் வெளியிடுகிறார். மூன்று வருடங்கள் கழித்து சிம்பு படம் வெளியாவதால் அவரின் ரசிகர்கள் மிகவும் ஆர்வாக இருக்கின்றனர். இப்படம் வெளியாவதையடுத்து சிம்புவுக்கு பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஹன்சிகா இப்படம் வெளியாவது குறித்து கூறும்போது, ‘கடைசியாக ‘வாலு’ படம் முடிவுக்கு வந்துள்ளது. நாளை உலகெங்கும் இப்படம் வெளியாகவுள்ளது. இது ஒரு நீண்ட பயணமாக அமைந்திருக்கிறது. இப்படத்தை இயக்கிய விஜய் சந்தருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இவ்வளவு நாட்கள் காத்திருந்ததற்கு பலன் கிடைத்திருக்கிறது. இவருடைய கடின உழைப்பை பாராட்டுகிறேன்.

சிம்புவுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இப்படத்திற்காக உங்களுடைய வலி, தியாகம், கடின உழைப்பு என அனைத்தையும் கொடுத்திருக்கிறீர்கள். அதற்கான வெகுமதி கிடைக்கவுள்ளது. விஜய், டி.ஆர், ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் இல்லையென்றால் இப்படம் வெளியாவதற்கு சாத்தியம் இல்லை.

இவர்கள் அனைவரும் படத்தை ஊக்குவிக்கவும், ஆதரவாகவும் இருந்திருக்கிறார்கள். இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்’’ என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions