இயக்கி நடிக்க ஆசைப்படும் சிம்பு!

Bookmark and Share

இயக்கி நடிக்க ஆசைப்படும் சிம்பு!

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய சிம்பு கதாநாயகன் ஆனபிறகு தன்னைத்தானே இயக்கிக் கொள்ளவும் தொடங்கினார். அதோடு, மற்ற டைரக்டர்கள் சொல்லும் கதைகளிலும் தனது தலையீட்டை அதிகமாக செலுத்தினார்.

அதன்காரணமாகவே சிம்புவை வைத்து படம் பண்ணவே இயக்குனர்கள் அஞ்சினர். அதேசமயம், கோவில் படத்துக்கு அவரை புக் பண்ணிய ஹரி மட்டுமே, நான் சொல்வதுதான் கதை, நான் சொல்வதுதான் சீன் இதன்படிதான் நடிக்க வேண்டும் என்று கண்டிசன் போட்டு சிம்புவிடம் வேலை வாங்கினார்.

அதோடு சிம்புவின் வழக்கமான பாணியை மாற்றி தனது பாணியிலேயே அந்த படத்தில் நடிக்க வைத்தார். அதன்பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாக மாறி டைரக்டர்களின் விருப்பத்திற்கேற்ற நடிகராக மாறினார் சிம்பு.

இருப்பினும், அவர் நடிக்கும் படங்கள் வெளியாகாமல் வருடக்கணக்கில் இழுத்தடிப்பதால், இது நம்ம ஆளு படத்தை அடுத்து தன்னைத்தானே இயக்கிக்கொள்ளவும் சில மெகாப்பட நிறுவனங்களை அணுகி வருகிறார் சிம்பு.

ஆனபோதும், இது நம்ம ஆளு படத்தின் ரிலீசுக்குப்பிறகு பேசுவோம் என்று சிலர் அவருக்கு நம்பிக்கை வாக்குறுதி அளித்திருக்கிறார்களாம். அதனால் இந்த படம் எப்படியேனும் வெற்றிபெற்ற தனது கேரியரை மாற்றியமைக்க வேண்டும் என்று மானசீக தெய்வங்களை வேண்டிக்கொண்டிருக்கிறார் சிம்பு.


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!
உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions