ஆரம்பமே அமர்க்களமா இருக்கே! -உற்சாகத்தில் சிம்பு

Bookmark and Share

ஆரம்பமே அமர்க்களமா இருக்கே! -உற்சாகத்தில் சிம்பு

கடந்த இரண்டு ஆண்டுகளும் சிம்புவின் கேரியரில் அதிக தேக்க நிலையை கொடுத்த ஆண்டுகளாகி விட்டன. அவரைப்போன்ற இளவட்ட ஹீரோக்களெல்லாம் வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களில் நடித்து வெளியிட்டுக் கொண்டிருக்க சிம்புவோ ஒரு படத்துக்கே வழியில்லாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்.

அதனால்தான், தான் நடித்து வந்த வாலு, வேட்டை மன்னன் படங்களை நம்பாமல் பாண்டிராஜ் இயக்கத்தில் இது நம்ம ஆளு படத்தை தானே தயாரித்து நடித்தார். அதோடு தனது மாஜி காதலியான நயன்தாரா தற்போது மார்க்கெட்டில் இருப்பதால் அவரை மீண்டும் தனக்கு ஜோடியாக்கி நடித்து முடித்து விட்டார்.

படமும் விரைவில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், அடுத்தபடியாக மீண்டும் கெளதம்மேனன் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடிப்பது சிம்புவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

அதோடு அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதால், இன்னொரு விண்ணைத்தாண்டி வருவாயா உருவாகப்போகிறது என்கிற மகிழ்ச்சியில் இருக்கும் சிம்பு, இந்த ஆண்டின் ஆரம்பமே அமர்க்களமா இருக்கே என்று சந்தோசத்தில் மிதந்து வருகிறார்.

அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகப்போகிற அடுத்த ஜெஸி, சமந்தாவா? இல்லை வேறு யாரேனுமா? என்பது விரைவில் தெரிந்து விடும்.


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!
உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions