
சிம்புவுக்கும், ஜெய்யுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரண்டு பேருமே அஜித்தின் ரசிகர்கள். இந்த ஒற்றுமை காரணமாகவோ என்னவோ, இருவருக்கும் நல்ல நட்பும் உண்டு. அதன் காரணமாக, சிம்பு நடித்த வேட்டை மன்னன் படத்தில் சிம்பு உடன் இணைந்து ஜெய்யும் ஒரு கேரக்டரில் நடித்தார்.
சிம்பு ஒழுங்காக கால்ஷீட் கொடுக்காததினால் இந்தப்படத்தையே ட்ராப் பண்ணினார் தயாரிப்பாளர்.. இந்நிலையில் இப்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் இது நம்ம ஆளு படத்திலும் ஜெய் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
இப்படத்தில் சிம்புவுடன் நயன்தாரா, ஆன்ட்ரியா ஆகியோர் நடிக்க, படம் முடிவடையும் நிலையில் உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் தற்போது ஜெய்யும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
ஜெய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறவிருக்கிறது. ஏற்கெனவே ராஜா ராணி படத்தில் ஜெய்யும், நயன்தாராவும் இணைந்து நடித்தனர். இப்போது சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இது நம்ம ஆளு படத்தில் ஜெய் இணைந்திருக்கிறார்.
இது நம்ம ஆளு படத்தில் ஜெய் படத்துக்கு ஏதாவது நன்மை விளையும்? படம் வெளியாகும்போது தெரிந்துவிடும்..!
Post your comment
Related News | |
![]() |