காதலிச்ச பொண்ணை விட்டுத் தருவேன், கலாச்சாரத்தை விட்டுத் தர மாட்டேன்... சிம்புவுக்கு குவியும் ஆதரவு

Bookmark and Share

காதலிச்ச பொண்ணை விட்டுத் தருவேன், கலாச்சாரத்தை விட்டுத் தர மாட்டேன்... சிம்புவுக்கு குவியும் ஆதரவு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தவிருக்கிற நடிகர் சிம்புவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நடிகர் சிம்புவோ ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வித்தியாசமான முறையில் இன்று போராட உள்ளார்.இதை பார்த்த உலக தமிழர்கள் சிம்புவை பாராட்டி வருகிறார்கள்.

சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட டீஸரில் காதலிக்கிற பெண்ணை கூட விட்டுக் கொடுப்பேன். ஆனால் உசிருக்கு உசிரான நண்பனை என்னைக்குமே விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார். தற்போதோ உசிருக்கு உசிரான கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் துணிந்து போராட வந்துள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு கருப்பு சட்டை அணிந்து இன்று மாலை 5 மணிக்கு அவர் வீட்டு வாசலில் 10 நிமிடம் பேசாமல் போராடப் போகிறார். இதே போன்று ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் தமிழர்கள் தங்கள் இடங்களில் கருப்பு உடையில் 10 நிமிடம் பேசாமல் போராடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

@iam_str நான் ஆந்திராவில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

@iam_str நான் சிங்கப்பூரில் பணியாற்றுகிறேன். நாளை(இன்று) மாலை 5 மணிக்கு என் வீட்டிற்கு வெளியே வந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவை தெரிவிப்பேன் என மற்றொரு ரசிகர் ட்வீட்டியுள்ளார்.

ரசிகர் ஒருவர் சிம்புவுக்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அவரது போராட்டத்திற்கு சுவிட்சர்லாந்தில் இருந்து ஆதரவு தெரிவித்து ட்வீட்டியுள்ளார்.


Post your comment





Related News
ஜல்லிக்கட்டுக்காக போராடிய என்னையும் கைது செய்யுங்கள்... சிம்பு ஆவேசம்
போராட்டக்கார்களுக்கு வேண்டுகோள் வைத்த சிம்பு!
தமிழ் நடிகன் சிம்பு போராட்டத்தின் தொடக்கப்புள்ளியாக இருந்தது மகிழ்ச்சி
போராட்டத்தை அடக்க ராணுவம் – சிம்பு சொன்ன அதிரடி யோசனை
எனக்கு படமே கிடைக்கலான கூட பரவாயில்லை - போராட்டத்துக்கு பிறகு சிம்பு பேச்சு
‘ஜல்லிக்கட்டு… லத்திசார்ஜ்…’ சூடான சிம்பு எடுத்த முடிவு
“ஜல்லிக்கட்டு நடத்தும் வரை விடக் கூடாது..!” - சிம்பு ஆவேசம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions