சிம்பு தவறவிட்ட வாய்ப்பை பிடித்த ஜெயம் ரவி

Bookmark and Share

சிம்பு தவறவிட்ட வாய்ப்பை பிடித்த ஜெயம் ரவி

தமிழ்த்திரையுலகில் இதுவரை இல்லாத மாதிரி அல்லது முதன்முறையாக என்று சொல்லுகிற முயற்சி அவ்வப்போது நடக்கும். அதுபோலத்தான் இப்போது சக்திசௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஜெயம்ரவி லட்சுமிமேனன் நடித்திருக்கும் மிருதன் படத்திலும் நாயகனின் வேடம் இதுவரை வராதது என்கிறார் இயக்குநர்.

இந்தப்படத்தில் போக்குவரத்துக்காவலராக நடிக்கிறார் ஜெயம்ரவி. இதுவரை நமது கதாநாயகர்கள், சட்டம்ஒழுங்கு காவல்அதிகாரி, துப்பறியும் அதிகாரி, சிபிஐ அதிகாரி எனப் பல்வேறு வேடங்களை ஏற்றிருக்கிறார்கள்.

ஆனால் போக்குவரத்துக் காவலராக நடித்ததில்லையாம். இந்த முதன்முறை பெருமையை சில மாதங்கள் முன்னால் தவறவிட்டிருக்கிறார் சிம்பு. 

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் தயாரான கான் படத்தில் சிம்புவுக்கு போக்குவரத்துக்காவலர் வேடம்தான். அந்தப்படத்தைப் பாதியில் நிறுத்தியதால் முதன்முறையாக போக்குவரத்துக் காவலர் வேடத்தில் நடித்தவர் என்கிற இடத்தை ஜெயம்ரவி பிடித்துவிட்டார். 

இந்தவேடத்தில் நடித்தால் படத்துக்கு ஆபத்து என்கிற செண்டிமெண்ட் இருக்கிறதோ என்னவோ? அந்தப்படம் பாதியில் நின்றது இந்தப்படத்துக்கு தணிக்கையில் ஏ சான்றிதழ்.

இதனால் பிப்ரவரி 19 அன்று வெளியாகவிருக்கும் இந்தப்படத்தில் வசூலில் முப்பதுவிழுக்காடு வரி செலுத்தியாக வேண்டும்.


Post your comment





Related News
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சின்மயி பொய் சொல்வது கண்கூடாக தெரிந்துவிட்டது - ராதாரவி
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions