சிம்புவுக்கு ஆறுதலாக அமைந்த கெஸ்ட் ரோல்!

Bookmark and Share

சிம்புவுக்கு ஆறுதலாக அமைந்த கெஸ்ட் ரோல்!

கண்ணா லட்டு தின்ன ஆசையா, இங்க என்ன சொல்லுது போன்ற படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்த சிம்பு, காக்கா முட்டை படத்தில் நடிகர் சிம்புவாகவே ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

ஆக, போடா போடிக்கு பிறகு அவர் நாயகனாக நடித்த படங்களே திரைக்கு வராத நிலையில், இந்த மூன்று படங்கள்தான் வெளியாகி அவருக்கு ஒரு ஆறுதலாக அமைந்துள்ளன.

மேலும், தற்போது சிம்பு நடிப்பில் ரிலீசுக்கு தயார் நிலையில் இருப்பது வாலு படம் மட்டுமே. இந்த படத்தை சரியான நேரம் பார்த்து வெளியிட வேண்டும் என்பதற்காகத்தான் அவர் ரிலீஸ் தேதியை நகர்த்திக்கொண்டே செல்வதாக கூறப்படுகிறது.

அதோடு, இந்த படத்தை வெளியிட்டதும் ஏற்கனவே கிடப்பில் போடப்பட்டிருக்கும் வேட்டை மன்னன் படத்தை வெளியிடும் வேலைகளிலும் இறங்கப்போகிறாராம் சிம்பு. அந்த படத்தை வெளியிட்டதும் இது நம்ம ஆளு படத்தை வெளியிடப்போகிறாராம்.

ஆக இந்த 2015ம் ஆண்டு மட்டும் சிம்பு நடிப்பில் மூன்று படங்கள் கட்டாயம் திரைக்கு வந்து விடுமாம். இந்த படங்களைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கெளதம்மேனன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் அச்சம் என்பது மடமையடா திரைக்கு வருமாம். 


Post your comment





Related News
பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்
மலையாள படத்தில் ‘காக்கா முட்டை’ சிறுவர்கள்
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
மராத்தியில் ரீமேக் ஆகும் காக்கா முட்டை!
பேயாக மாறும் காக்காமுட்டையின் அம்மா
ஆஸ்கர் போட்டியில் காக்கா முட்டைக்கு ஏமாற்றம்!
தேசிய விருது பெற்ற படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு!
ஒரு முட்டை யின் 50 சாதனை...!
காக்க முட்டை வெற்றியை பயன்படுத்தும் கிருமி
காக்கா முட்டையை தொடர்ந்து காமெடி படம் எடுக்கும் மணிகண்டன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions