கப்பல் நாயகியின் வாய்ப்பை பறித்த சிம்புவின் நாயகி..!

Bookmark and Share

கப்பல் நாயகியின் வாய்ப்பை பறித்த சிம்புவின் நாயகி..!

கன்னடத்தில் சில மாதங்களுக்கு முன்பு புனீத் ராஜ்குமார் ஹீரோவாக நடித்து வெளியான 'மைத்ரி' படம் சூப்பர்ஹிட்டானது தொடர்ந்து கடந்த மாதம் வெளியான 'ராணா விக்ரமா' வோ பிளாக் பஸ்டர் ஹிட்.. இந்த சந்தோஷத்துடன் புனீத் ராஜ்குமார் நடிக்கும் 25வது படத்திற்கான பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்தப்படத்தை இயக்குபவர் நமது தமிழ் இயக்குனரான 'எங்கேயும் எப்போதும்' சரவணன் தான். அதுமட்டுமல்ல இந்தப்படத்தில் அருண் விஜய்யும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார்.  

கப்பல் படத்தில் நடித்த சோனம் பஜ்வா தான் இந்தப்படத்தின் கதாநாயகியாக, முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கதாநாயகி கேரக்டருக்கான லுக் டெஸ்ட் எடுத்து பார்த்தபோது அந்த ரோலுக்கு அவர் சரியாக பொருந்தமாட்டார் என நினைத்த சரவணன், அடுத்ததாக பல்லவி சுபாஷை வரவழைத்து டெஸ்ட் செய்தார்.. அதில் அவர் திருப்தியாகவே உடனே அவரையே கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டார்.

பல்லவி சுபாஷ் தற்போது  கௌதம் மேனன் இயக்கத்தில் 'அச்சம் என்பது மடமையடா' என்கிற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions