மீண்டும் சிம்பு படத்திற்கு இசையமைக்கும் குறளரசன்!

Bookmark and Share

மீண்டும் சிம்பு படத்திற்கு இசையமைக்கும் குறளரசன்!

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘இது நம்ம ஆளு’. இதில் நயன்தாரா சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். குறளரசன் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மீண்டும் சிம்பு படத்திற்கு குறளரசன் இசையமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் தற்போது ‘அச்சம் என்பது மடமையடா’, ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து ‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகவுள்ள இந்த படத்தில் குறளரசன் இசையமைக்கவுள்ளதாகவும் அதற்கான பணியை அவர் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்க இருப்பதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions