சிம்பு படத்தை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்

Bookmark and Share

சிம்பு படத்தை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்

சிம்பு, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'இது நம்ம ஆளு'. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து நீண்ட நாட்களாகியும் இன்னும் வெளிவராத நிலையில் இப்படம் இருக்கிறது.

வரும் பிப்ரவரியில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

சமீபகாலமாக தேனாண்டாள் பிலிம்ஸ் பல படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான ‘கதகளி’ படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட்டிருந்தது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

அதுபோல் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 2’ படத்தையும் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி, ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியிருக்கிறார்.


Post your comment





Related News
மீண்டும் தள்ளிபோகும் அச்சம் என்பது மடமையடா
இது நம்ம ஆளு 50-வது நாள் வெற்றி கொண்டாட்டம்!
சிம்புவை ஸ்டைலை மாற்றும் விஜய்யின் ஆஸ்தான காஸ்டியூம் டிசைனர்!
நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
சிம்புவின் லவ் ஆன்தம் என்னதான் ஆனது?
ஆகஸ்டில் தொடங்கும் சிம்பு – விஜய் படம்!
நயன்தாராவுடன் நிஜ வாழ்க்கையில் இணைவது குறித்து பேசிய சிம்பு!
சிம்புவுக்கு தக்க சமயத்தில் உதவிய நயன்தாரா!
‘இது நம்ம ஆளு’ 3 நாள் பிரம்மாண்ட வசூல் விவரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions