பொருத்தமான கதை அமைந்தால் நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு பேட்டி

Bookmark and Share

பொருத்தமான கதை அமைந்தால் நயன்தாராவுடன் மீண்டும் நடிப்பேன்: சிம்பு பேட்டி

சிம்பு–நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ள படம் ‘இது நம்ம ஆளு’. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் வருகிற 27–ந் தேதி திரைக்கு வருகிறது. இது பற்றி சிம்புவிடம் கேட்ட போது,

‘இது நம்ம ஆளு’ எனது வழக்கமான படம் போல இருக்காது. இதில் ‘பஞ்ச்’ வசனங்கள் கிடையாது. இது வெறும் காதல், சண்டை காட்சிகளை கொண்ட படம் அல்ல. சண்டை காட்சி இல்லாமல் நான் நடித்த முதல் படம்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஒரு இளைஞனுக்கும், பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் பற்றிய படம். திருமணத்துக்கு முன்பு நடைபெறும் நிகழ்வுகளை சித்தரிக்கும் கதை. இது எல்லா இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்.

படம் நன்றாக வந்திருக்கிறது. நயன்தாராவுக்கும் எனக்கும் பொருத்தமான நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் மீண்டும் ஜோடியாக நடிப்போம். தனிப்பட்ட முறையில் எனக்கும் நயன்தாராவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.

படம் தாமதம் ஆனதற்கு யாரும் காரணம் அல்ல. படம் நன்றாக வந்திருக்கிறது. இந்த படத்தை பார்ப்பவர்கள் இந்த ஜோடி போல் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions