சிம்புவை மீண்டும் கோர்த்து விட்ட பாண்டிராஜ்

Bookmark and Share

சிம்புவை மீண்டும் கோர்த்து விட்ட  பாண்டிராஜ்

‘தூங்காவனம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பலரும் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் பாண்டிராஜும் கலந்துகொண்டார். 

அப்போது, அவர் பேசும்போது, ஒருநாள் ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பின்போது சிம்பு ரொம்ப லேட்டாக வந்தார். அவரிடம், என்ன ஜீ இப்படி லேட்டா வர்றீங்களே என்று கேட்டேன். அப்போது, அவர் சின்ன வயசுல இருந்தே நடிக்கிறேனா, நடிப்பு கொஞ்சம் போரடிக்குதுஜீ என்று சொன்னார். 


என்ன ஜீ, நீங்க இப்படி சொன்னீங்கனா, கமல் சாரையெல்லாம் என்ன சொல்வது. அவர் எத்தனை வருஷமா நடிச்சிட்டு இருக்கார் என்று சொன்னேன். அதுக்கு, அவர் கமல் சாரை வைத்து என்னை ஒப்பிடாதீங்க. அவர் லெவல் வேற. அவர் ஒரு பெரிய கலைஞன்.

அவருக்கு முன்னாடி நாமெல்லாம் ஒண்ணும் கிடையாது. தயவு செய்து அவரோடு என்னையெல்லாம் ஒப்பிடாதீங்க என்று அடக்கத்தோடு சிம்பு சொன்னதாக பாண்டிராஜ் கூறினார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions