
பிரேம்ஜி நடிப்பில் வித்தியாசமாக உருவாகியிருக்கும் புதிய படம் ‘மாங்கா’. இப்படத்தின் டிரைலரும், ஆடியோவும் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் இரண்டாவது டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த டிரைலரை பிரேம்ஜி அமரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டுவிட்டரில் பிரேம்ஜியை தொடரும் அவரது ரசிகர்கள் பலரும் இந்த டிரைலரை ரீ டுவிட் செய்து வருகின்றனர். ஆனால், எந்த சினிமா பிரபலங்களும் இவரது டிரைலரை ரீடுவிட் செய்யவில்லை. கடைசியில் சிம்பு, இவரது டிரைலரை ரீடுவிட் செய்ய, அவருக்கு நன்றி சொல்லும்விதமாக பிரேம்ஜி அமரன், தலைவா, நீங்க ஒரு ஸ்டார் மட்டும்தான் என்னுடைய டிரைலரை ரீடுவிட் செய்திருக்கிறீர்கள். ரொம்ப நன்றி என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு சிம்பு பதிலளிக்கும்விதமாக, பிரேம்ஜி அமரன் என்னுடைய அன்பும், ஆதரவும் உனக்கு எப்போதும் உண்டு. தட்டி விடுவதற்கு இங்கு நிறைய பேர் இருக்காங்க. தூக்கி விடுவதற்கும், கைகொடுக்கவும்தான் ஆட்கள் கம்மி. ஆண்டவன் பார்த்துப்பான் என்று பதில் டுவிட் கொடுத்துள்ளார். இதற்கு சிம்புவின் ரசிகர்கள், உங்களுடைய ரசிகர்கள் தட்டி விடமாட்டோம். தூக்கிவிடுவோம் என்று சிம்புவுக்கு பதில் டுவிட் கொடுத்து வருகிறார்கள்.
பிரேம்ஜிக்கு எந்த ஸ்டாருமே கைகொடுக்காத நிலையில், சிம்பு கைகொடுத்து தூக்கிவிட்டது அவரை ரொம்பவும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Post your comment