சிம்பு – ரஜினி மோதல் : பரபரக்கும் கோடம்பாக்கம்

Bookmark and Share

சிம்பு – ரஜினி மோதல் : பரபரக்கும் கோடம்பாக்கம்

சிம்பு தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து கொஞ்சம் நல்ல பேர் வாங்கி உள்ளார். கடைசியாக வெளியாகிய இவரின் அச்சம் என்பது மடமையடா படமும் நன்றாக போனது. இப்போது அன்பானவன் அசராதவன், அடங்காதவன் என்ற படத்தில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் மூன்று பருவங்களில் உள்ள சிம்புவாக நடித்துள்ளார். தமன்னா, ஸ்ரேயா ஜோடிகள். யுவன் சங்கர் ராஜா இசை. இந்த படத்தை ஏப்ரல் மாதம் வெளியிடப்போகிறார்கள்.

இதே ஏப்ரல் மாதம் தான், ஷங்கரின் கனவு படமான 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டு வரும், ரஜினி ஹீரோயினாக நடிக்கும் 2.0 வெளிவரப்போகிறதாம்.

ரஜினியின் பிரமாண்ட படத்துடன் நேருக்கு நேர் மோத சிம்பு படத்துக்கு எப்படி தைரியம் வந்தது என்றால் ஜல்லிக்கட்டு தான் காரணமாம்.

பீட்டா ஆதரவு ஹீரோயின் எமி ஜாக்சன் மற்றும் ரஜினி குடும்பமே பீட்டா என்று சொல்லப்படும் வேளையில் மக்கள்  அந்த படத்துக்கு அவ்வளவு ரெஸ்பான்ஸ் இருக்காதுன்னு நம்புகிறார்களாம்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions