சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா

Bookmark and Share

சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா

சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே எம்.ஜி.ஆரில் தொடங்கி தற்போது ரஜினி, கமல் வரையிலும் அரசியலில் குதித்துள்ளனர். அந்த வகையில் அடுத்ததாக அரசியலில் ஈடுபட போகிறவர்கள் என்ற லிஸ்டில் சிம்புவும் ஒருவர்.

கடந்த சில மாதங்களாகவே தத்துவங்களையும், சிந்தனை கருத்துகளையும் கூறி வரும் சிம்பு மிக விரைவில் அரசியல் பிரவேசம் செய்வார் என்றே தெரிகிறது. ஆனால் அவர் புது கட்சியை தொடங்குவாரா இல்லை அவரது அப்பாவின் கட்சியையே பார்த்துக்கொள்வாரா என்பது தெரியவில்லை.

ஏனெனில் சிம்புவின் அப்பா டி.ஆர் வைத்திருக்கும் கட்சியை பற்றி பலபேருக்கு தெரியாது. அதற்கு சிம்பு போன்ற ஆட்கள் வந்தால் கொஞ்சம் பிரபலமடையும். அதனால் தனது மகனை இப்போதே பிரைன்வாஷ் பண்ண ஆரம்பித்துவிட்டார், டி.ஆர்.

சிம்பு ஓகே சொன்னதும் கட்சி அவரது கைக்கு தான். அரசியலில் ஈடுபடும் எண்ணம் உள்ள சிம்புவுக்கு அப்பாவின் கட்சி நல்ல எதிர்காலத்தை தருமா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions