சிம்புவுக்கு ஜோடியாக சமந்தா?

Bookmark and Share

சிம்புவுக்கு ஜோடியாக சமந்தா?

அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்துக்கே முன்பு சிம்புவைக்கொண்டு கெளதம்மேனன் இயக்கி வந்த படம் சட்டென்று மாறுது வானிலை. அப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கெளதம்மேனனுக்கு அஜித் கிரீன் சிக்னல் கொடுத்ததால் சிம்பு நடித்த படத்தை நிறுத்தி விட்டு, என்னை அறிந்தால் படவேலைகளில் இறங்கினார் கெளதம்மேனன்.

ஆனால், என்னை அறிந்தால் ரிலீசானதுமே, சட்டென்று மாறுது வானிலை படத்திற்கு அச்சம் என்பது மடமையடா என்று பெயர் வைத்து படப்பிடிப்பை தொடங்கினார். அப்பட வேலைகள் தற்போது துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது.

அதேசமயம், ஹீரோயினி போர்ஷன் மட்டும் இன்னும் படமாக்கப்படவில்லையாம். காரணம், முன்பு அப்படத்துக்காக கால்சீட் கொடுத்திருந்த வட இந்திய நடிகை பல்லவி சுபாஷ் இப்போது வேறு சில படங்கள் மற்றும் நாடகங்களில் நடிக்க கால்சீட் கொடுத்திருப்பதால் கெளதம்மேனனின் அழைப்புக்கு செவ்சாய்க்கவில்லையாம்.

அதனால், தற்போது சிம்புவுக்கு ஜோடியாக வேறு கதாநாயகியை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டுள்ளாராம். அந்த வகையில், இன்னும் கதாநாயகி யார் என்பது முடிவாகாத நிலையில், ஏற்கனவே அவரது இயக்கத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்த சமந்தாவே மீண்டும் நடிக்க வாய்ப்பிருப்பதாக கெளதம்மேனன் தரப்பில் பேசிக்கொள்கிறார்கள்.

ஒருவேளை அவரது கால்சீட்டும் உடனடியாக கிடைக்காதபட்சத்தில் வேறு நடிகை யாரையாவது நடிக்க வைப்பாராம் கெளதம்மேனன்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions