சிம்புவுக்கு தக்க நேரத்தில் உதவி செய்த சந்தானத்தின் நட்பு

Bookmark and Share

சிம்புவுக்கு தக்க நேரத்தில் உதவி செய்த சந்தானத்தின் நட்பு

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படம் கடந்த 14-ம் தேதி வெளிவந்தது. இப்படம் வெளிவருவதற்கு கடைசி நிமிடம் வரை படத்திற்கு பல்வேறு தடைகள் வந்தது. வாலு படம் வெளிவந்த நாளன்று சில திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் வாலு படத்தை திரையிடுவதற்கு முறையான அனுமதி கடிதம் வரவில்லை என்று தியேட்டரில் சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. பின்னர் இந்த பிரச்சனையெல்லாம் தீர்ந்து ‘வாலு’ படம் ரிலீசானது.

ஆனால், சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டதற்கான உண்மையான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது, இப்படக்குழுவினர் ஆரம்பத்தில் சந்தானத்திடம் இப்படம் வெளிவருவதற்குள் அவர் நடித்ததற்கான சம்பளத்தின் முழுத்தொகையையும் கொடுத்துவிட வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டிருந்தார்களாம்.

ஆனால், கடைசி நாள் வரை சந்தானத்துக்கு அந்த முழுத்தொகையும் வழங்கப்படவில்லையாம். அதனால், ஒப்பந்தத்தை மீறி படம் வெளிவந்தால் ஏதாவது பிரச்சினை ஏற்படுமோ என்று பயந்துதான் இந்த படத்தை முதலில் திரையிடவில்லையாம்.

பின்னர், சிம்பு இந்த விவகாரம் பற்றி சந்தானத்திடம் கூற, அவர் பின்னர் அந்த ஒப்பந்தத்தில் மாற்றி எழுதி கையெழுத்திட்டாராம். இதன்பின்னர்தான் படம் திரையரங்குகளில் வெளிவந்தாம்.

சின்னத்திரையில் நடித்து வந்த சந்தானத்தை சிம்பு தனது ‘மன்மதன்’ படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து பல ஆண்டுகளாக சிம்புவுடன் நட்புடன் பழகிவரும் சந்தானம் தக்க நேரத்தில் செய்த உதவியால் சிம்புவின் மனதை குளிர வைத்திருக்கிறார். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions