சிம்பு-செல்வராகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு

Bookmark and Share

சிம்பு-செல்வராகன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு

சிம்பு-செல்வராகவன் புதிய கூட்டணி இணைந்து ‘கான்’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியிடப்போவதாக செல்வராகவன் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும்வேளையிலேயே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாவது ரசிகர்களுக்கு படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா மற்றும் டாப்சி ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படம் மட்டுமல்லாமல் சிம்பு, கௌதம் மேனன் இயக்கம் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். மேலும், பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. மேலும், ‘வாலு’ படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகவிருக்கிறது.

 


Post your comment





Related News
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!
பிரமாண்ட செட்டில் உருவாகும் சூர்யாவின் “சூர்யா 36 “
நான் இப்படி தான், நீங்களும் இதை ட்ரை பண்ணுங்க - செல்வராகவன் அதிரடி ட்வீட்.!
சூர்யா - செல்வராகவன் கூட்டணியில் இணைந்த முக்கிய பிரபலம்
குதூகலத்துடன் செல்வராகவன் போட்ட ட்வீட், கேள்வி கேட்கும் ரசிகர்கள் - என்னாச்சு?
இவர்களுக்காக இதை செய்வதற்கு நான் 5 படத்திற்கு கதையே எழுதிடுவேன் - செல்வராகவன் ஓபன் டாக்.!
செல்வராகவனை அடுத்து மற்றொரு ஹிட் பட இயக்குனருடன் இணைகிறாரா சூர்யா?
அடடா இது நம்ம சிங்கார சென்னையா? - அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்.!
செல்வராகவனை அடுத்து மெகா ஹிட் இயக்குனருடன் இணையும் சூர்யா – உற்சாகத்தில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions