சிம்பு - செல்வராகவன் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை!

Bookmark and Share

சிம்பு - செல்வராகவன் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை!

சிம்பு படம் என்றாலே தயாரிப்பாளர்கள் ஒரு நிமிடம் கலங்குகிறார். காரணம் படம் ஆரம்பித்த பின்னர் அந்தப்படம் எப்போது ரிலீஸாகும் என்ற கவலை தான்.  கடந்த காலங்களில் இவர்கள் இருவரையும் வைத்து படம் எடுத்தவர்கள் பட்டபாட்டை படத்துறையினர் நன்கு அறிவார்கள்.

அதனாலோ என்னவோ சிம்பு - செல்வராகவனை வைத்து படம் எடுக்க எந்தத் தயாரிப்பாளரும் முன்வரவில்லை. இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக ஒரு படம் அறிவிக்கப்பட்டது.

இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு திரை உலகத்தினரால் ஒதுக்கப்பட்டார் செல்வராகவன். தன் அண்ணனுக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி வரத்தப்பட்ட தனுஷ், தன் மாலை நேரத்து நண்பரான சிம்புவிடம் சொல்லி செல்வராகவனுக்கு ஒரு படம் பண்ணிக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதன்படி தொடங்கப்பட்ட ப்ராஜக்ட்தான் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம்.யார் தயாரிப்பாளர்.. படத்தின் பெயர் என்ன? போன்ற விவரங்கள் இல்லாமலே அப்படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் நடத்தி முடிக்கப்பட்டு அந்த புகைப்படங்களை மீடியாவில் கசியவிட்டனர்.

இப்படம் பற்றி லேட்டஸ்ட் தகவல் என்ன தெரியுமா? இந்த நிமிடம் வரை சிம்பு செல்வராகவன் இணையும் படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளரை அமுக்கிப்போடுவதற்காகவே போட்டோஷூட் நடத்தி உள்ளனர். அப்படியும் தயாரிப்பாளர் அகப்படவில்லை.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions