நடிகர் சிம்புவுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம்!

Bookmark and Share

நடிகர் சிம்புவுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம்!

நடிகர் சிம்பு பாடிய ‘பீப்’ பாடல் கடந்த மாதம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சிம்பு மீதும் இதற்கு இசையமைத்ததாக கூறி இசையமைப்பாளர் அனிருத் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து இந்த வழக்குகளை ரத்துசெய்ய கோரி நடிகர் சிம்பு, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

பின்னர் கோவையில் தொடரப்பட்ட வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு கடந்த மாதம் 21-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஜனவரி 4-ந் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று பிற்பகல் இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், சிம்பு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவு என்பதால் அவர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் வரத்தேவையில்லை.

இருப்பினும் அவருக்கு முன்ஜாமீன் தேவையென்றால், வழக்கு சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களை அணுகலாம் என்று உத்தரவிட்டனர். 

இதன்மூலம் முன்ஜாமீன் கோரிய சிம்புவின் வழக்கு உயர்நீதிமன்றத்தில் முடித்து வைக்கப்பட்டது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions