சிம்புவை பற்றி நான் ஏதும் கூறவில்லை: ஸ்ரீகாந்த் விளக்கம்

Bookmark and Share

சிம்புவை பற்றி நான் ஏதும் கூறவில்லை: ஸ்ரீகாந்த் விளக்கம்

நடிகர் சிம்புவின் வாலு படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெளியாவதற்கு ஏற்பட்ட தடைகள் அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில், வாலு படம் வெற்றிகரமாக வெளியானதற்கு சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்து நிறைய பேர் டுவிட்டர் இணையதளத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டிருந்தாலும், சிலர் சிம்புவை பற்றி தவறான பதிவுகளையும் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், நடிகர் ஸ்ரீகாந்த் பெயரில் டுவிட்டர் இணையதளத்தில் சிம்புவை பற்றி தவறான தகவல்கள் வெளியானது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இந்த பதிவு ஸ்ரீகாந்தையும் அதிர வைத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, டுவிட்டர் இணையதளத்தில் என்னுடைய பெயரில் வரும் கருத்துக்கள் அனைத்தும் போலியானவை. நான் இதுவரை டுவிட்டர் தளத்தில் எந்தவொரு கணக்கையும் வைக்கவில்லை. யாரோ சில விஷமிகள் என்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

சிம்பு என்னுடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அதேபோல், அஜித், சிம்புவின் ரசிகர்களை பற்றியும் எந்தவொரு விமர்சனத்தையும் நான் அளிக்கவில்லை. என் பெயரில் போலியாக கணக்கினை வைத்திருப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்ரீகாந்த் தற்போது ‘சவுகார் பேட்டை’ என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடித்து வருகிறார். திகில் நிறைந்த படமாக இது உருவாகி வருகிறது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions