சிம்புவிற்கும் நோ சொன்ன நயன்தாரா

Bookmark and Share

சிம்புவிற்கும் நோ சொன்ன நயன்தாரா

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. குறளரசன் இசையமைத்து வரும் இப்படத்தை டி.ராஜேந்தர் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து இயக்கியுள்ளார் பாண்டிராஜ்.

நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் முதல் வாரத்தில் படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ‘இது நம்ம ஆளு’ படத்தின் இசையை சிம்பு பிறந்த நாளான பிப்ரவரி 3-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. வல்லவனுக்கு பிறகு சிம்புவுடன் இணைந்து நடித்துள்ள இது நம்ம ஆளு படத்தின் விளம்பரங்களிலும் இப்போது நயன்தாராவே போஸ்டர்களில் முக்கியத்துவம் பெற்று வருகிறார்.

மற்ற படங்களைப்போலவே இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் தான் வருவதில்லை என்பதை முன்மொழிந்து விட்டாராம் நயன்தாரா. ஆக, ஆடியோ நிகழ்ச்சிக்கு எப்படியேனும் நயன்தாராவை அழைத்து வந்து விட வேண்டும் என்கிற சிம்புவின் திட்டமும் ஒர்க்அவுட்டாக வில்லையாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions