சிம்புவின் புதுப்பட கெட்டப்பும் திருட்டுத்தனமாக வெளியானது!

Bookmark and Share

சிம்புவின் புதுப்பட கெட்டப்பும் திருட்டுத்தனமாக வெளியானது!

சிம்பு பாடிய பீப் பாடல் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளிவந்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி சிம்புவுக்கு பெரிய மனகஷ்டத்தை கொடுத்தது.

இதைத் தொடர்ந்து தற்போது சிம்பு அடுத்ததாக 3 கெட்டப்புகளில் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் ஒரு கெட்டப் திருட்டுத்தனமாக இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

சிம்பு தற்போது நடித்து வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் முகம் முழுக்க தாடியுடன் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அடுத்தாவதாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். 

இப்படத்தில் சிம்பு 3 கெட்டப்புகளில் நடிப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இதில் ‘ஐ’ படத்தில் மேக்கப் கலைஞராக பணியாற்றிய சீன் பூட் பணியாற்றவிருக்கிறார். இந்த படத்தில் சிம்பு எந்தமாதிரியான கெட்டப்புகளில் நடிக்கப்போகிறார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. 

இந்நிலையில், படம் தொடங்குவதற்கு முன்பாக சீன் பூட், சிம்புவுக்கு ஸ்பெஷல் மேக்கப் டெஸ்ட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இருப்பதுபோன்றே இதிலும் முகம் முழுக்க தாடியுடன் இருக்கிறார் சிம்பு. இதே கெட்டப்பில்தான் நடிக்கிறாரா? அல்லது வேறு கெட்டப் எதுவும் மாற்றுகிறார்களா? என்பது கூடிய விரைவில் தெரிய வரும் என நம்பலாம்.


Post your comment





Related News
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions