பீப்பாடல் விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரிய சிம்பு மனு தள்ளிவைப்பு

Bookmark and Share

பீப்பாடல் விவகாரம்: வழக்கை ரத்து செய்யக்கோரிய சிம்பு மனு தள்ளிவைப்பு

நடிகர் சிம்பு பாடியதாக ‘பீப்’ ஆபாச பாடல் இணையதளத்தில் வெளியானது. இந்த பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்ததாக கூறப்படுகிறது. இந்த பாடல் வரிகளில் பெண்களை கொச்சைப்படுத்தும் விதமான பல வார்த்தைகள் இடம்பெற்றிருந்தது. 

இதையடுத்து நடிகர் சிம்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. சிம்பு, அனிருத் மீது பெண்கள் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணைக்காக டிசம்பர் 19-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிம்பு, அனிருத் ஆகியோருக்கு ரேஸ்கோர்ஸ் போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். 

இதையடுத்து ஐகோர்ட்டில் சிம்பு மனு தாக்கல் செய்தார். அதில், கோவை போலீசார் பதிவு செய்த வழக்கையும், அந்த வழக்கு விசாரணைக்காக தன்னை நேரில் ஆஜராகவேண்டும் என்று அனுப்பிய சம்மனையும் ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் தியாகேஸ்வரன், ‘ஒரு சம்பவத்துக்கு பல வழக்குகள் பதிவு செய்ய முடியாது. ஆனால் தமிழகம் முழுவதும் பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நேற்றுக்கூட முன்ஜாமீன் மனு மீதான உத்தரவில், கோவை வழக்கிற்கு சென்னையிலேயே ஆஜராகலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது’ என்று வாதிட்டார். 

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எமிலியாஸ், ‘பதிவு செய்யப்பட்ட வழக்கிற்கு நேரில் ஆஜராகும்படி மனுதாரருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் இதுவரை ஆஜராகவில்லை.

காலஅவகாசத்தை கேட்டுக்கொண்டே வருகிறார். அவர் முதலில் ஆஜராக உத்தரவிடவேண்டும்’ என்று வாதிட்டார். அப்போது நீதிபதி, ‘மனுதாரர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு இதுதானே’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இருதரப்பு வக்கீலும் ‘ஆமாம்’ என்று கூறினார்கள்.

இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை 21-ந் தேதி தள்ளிவைக்கிறேன். அதற்குள் கோவை மாவட்ட போலீசார், இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Post your comment





Related News
மேடையில் பேசாமல் ஓடிய சிம்பு
அரசன் படத்தில் நடிக்காமல் இழுத்தடிப்பு - நடிகர் சிம்புவுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
அடுத்தடுத்து 4 படங்களில் ஒப்பந்தமாகிய சிம்பு
சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்
விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
கன்னட சினிமாவில் புது அவதாரம் எடுத்த சிம்பு - இனி வேற லெவல் தான்.!
மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
இதெல்லாம் போராட்டமா? கருப்பு சட்டையுடன் எதிர்ப்பு தெரிவியுங்கள் - சிம்பு பேச்சால் பரபரப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions